தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன் கலந்துரையாடிவருகின்றோம் அவ்வாறே தற்போது அடுத்தகட்டத்தை நோக்கிய செல்வதற்காக சந்திப்புகள் இடம்பெற்றுவருகிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஐனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் கேட்டபோதே இதனை தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிக்கையில்

பாராளுமன்ற தேர்தலுக்கு அப்பால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாற்றுக்கட்சிகளை ஆதரித்தவர்களின் மனவெளிப்பாடுகள் தொடர்பாக மக்கள் அதிர்ப்தியடைந்துள்ளதை நாங்கள் அறிந்து கொண்டதுடன் மக்களே எம்மை நோக்கி வருவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.

இவ்வாறான சூழலில் அடுத்தகட்ட நகர்வுகளை மக்களின் தேவைகளை நாம் நிறைவேற்றிகொள்வதற்கு நாங்கள் முதலில் ஒன்றிணையவேண்டும். குறிப்பாக தமிழ்தேசிய நிலைப்பாட்டில் இருக்கின்ற தமிழ்தேசிய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி பொறுப்பு எங்கள் ஒவ்வோறுவரிடம் உள்ளது அந்தவகையில் நாம் சந்திப்புகளில் ஈடுபடுகின்றோம் சந்திப்புகளின் போதும் ஒன்றிணைந்து செயற்படுவதையும், வடக்கு மாகாணசபை தேர்தல், அரசியலமைப்பு தொடர்பாக போசிவருகின்றோம் அடுத்த கட்டமாக தமிழ்தேசிய கட்சிகளை ஒன்றிணைந்து ஒரே குடையாக செயற்படவேண்டும் என்ற நிலையை உருவாக்கவேண்டும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.

நாங்கள் பிரிந்து நிற்பதால் எதையும் சாதிக்கப்போவதில்லை நாங்கள் பிரிவது மாற்று சக்திகளுக்கே சாதமாக மாறிவிடும் . தமிழ்மக்களின் கோரிக்கைகள் அரசியல் தீர்வு விடயங்கள் அடிபட்டுபோகும் நிலையை ஏற்படுத்திவிடும் எனவே இதற்கு நாங்கள் இடம்கொடுக்க கூடாது எமது ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன எனவே நாம் அதைநோக்கிய முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றோம் .

தற்போதைய ஆட்சியாளர்கள் தமிழ்மக்களுக்கு தேர்காலத்தில் கூறிய வாக்குறுதிகளை எதாவது செய்வார்களா என்றால் இதுவரை செய்யாதவர்கள் இனியும் செய்வார்களா என்றால் அதனை இல்லை என்றே கூறவேண்டும் .தேர்தலுக்காகக் கூறியவை தேர்தலுடனே சென்றுவிட்டது மாகாணசபை தேர்தல் விடயத்திலும் இதுவே காலத்திற்குகாலம் காலத்தை கடத்துகின்ற செயற்பாட்டையே இவர்கள் செய்துவருகிறார்கள் எனவே நாங்கள் தமிழ்தேசிய கட்சியாக ஒரே குடையின் கீழ் செயற்படுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்துவருகின்றோம் என்றார்.

pera

மீள் எழுச்சித் திறன் கொண்டதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் ஆதரவு

December 9, 2025

பேராதனைப் பல்கலைக்கழகத்தை முன்னரை விட மேலும் பலமாகவும், பாதுகாப்பாகவும், மீள் எழுச்சித் திறன் கொண்டதாகவும் கட்டியெழுப்ப அரசாங்கம் தயாராக இருப்பதாகப்

wea

இலங்கைக்குள் நுழையும் மற்றுமொரு புயல்

December 9, 2025

வங்காள விரிகுடாவில் உருவான புயலொன்று இலங்கைக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில்

v

வீடுகளில் வெடிப்பு: 30 குடும்பங்கள் வெளியேற்றம்

December 9, 2025

மொனராகலை பிரதேச செயலகப் பிரிவின் கீழ் வரும் சிரிகல மொனராகலை தோட்டத்தில் வீடுகளில் ஏற்பட்ட வெடிப்புகள் காரணமாக முப்பது குடும்பங்கள்

reg

“டித்வா” சூறாவளியால் காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோர் பதிவு ஆரம்பம்!

December 9, 2025

காணாமல் போனோர் மற்றும் உயிரிழந்தோரின் இறப்புப் பதிவு ஆரம்பம் “டித்வா” சூறாவளி நிலைமை காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு

ve

நுவரெலியா மாவட்டத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு?

December 9, 2025

டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர

arrest

இளைஞர் ஒருவர் படுகொலை; சந்தேகநபர் கைது

December 9, 2025

பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலான வீதி பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (08)

ambippid

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அம்பிட்டிய தேரருக்கு பிடியாணை!

December 9, 2025

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள

gramba

அரசியல் அழுத்தம்; நிவாரணத்தை சரியாக செய்ய சிரமம்?

December 9, 2025

நிவாரணப் பணிகளின் போது அரசியல் அழுத்தம் – கிராம உத்தியோகத்தர்கள் குற்றச்சாட்டு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில்

mana

மீண்டும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

December 9, 2025

மத்திய, வடமேல் மாகாணங்களில் உள்ள கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான

Weather

இன்றைய வானிலை

December 9, 2025

வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென

man

மன்னார் மாணவர்கள் ஜோர்ஜியாவில் சாதனை

December 9, 2025

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் ஏராளமான வெற்றிக் கிண்ணங்களை

sid

தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையைதான் எமது மக்களும் சர்வதேச நாடுகளும் விரும்புகின்றன – சித்தார்த்தன்

December 9, 2025

தமிழ்த்தேசியத்தின் பால் செயற்படும் அனைத்து தமிழ் கட்சிகளையும் இணைத்து செயற்படுத்துவதை நாம் விரும்புகின்றோம் இதற்காக ஏற்கனவே இணைந்து செயற்படும் கட்சிகளுடன்