தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என்ற அம்பிட்டிய தேரருக்கு பிடியாணை!

தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் எனக் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கைது செய்யுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ள அம்பிட்டிய சுமணரத்ன தேரரை, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (08) பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், அவரை இதுவரை ஏன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவில்லை என்பது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

கடந்த 2023-10-23 ஆம் திகதி ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியொன்றில், “வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்” என சுமணரத்ன தேரர் தெரிவித்திருந்தார்.

இவரது இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக, 2023-10-27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க ரணஞ்சக என்பவரால் முறைப்பாடு செய்யப்பட்டது. அதற்கமைய, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், குறித்த தேரரை கைது செய்யுமாறு கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபரான தேரர் நீதிமன்றில் ஆஜராகவில்லை. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை வழக்கு தொடுநர் தரப்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனையடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், அவரை இதுவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்காமைக்கான காரணம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கட்டளையிட்டார்.

ac

ஆசிய கிண்ண கிரிக்கெட் : இலங்கை அணியில் ஆகாஷ், மாதுளன்

December 9, 2025

ஐக்கிய அரபு இராச்சியத்தில் வெள்ளிக்கிழமை (12) ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில்

uae

கட்டுநாயக்கவை வந்தடைந்தது ஐக்கிய அரபு அமீரக நிவாரண சேவை விமானம்

December 9, 2025

ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல்

x

இன்டர்நெஷனல் லீக் ரி20; பெத்தும் நிஸ்ஸன்க குவித்த 3ஆவது அரைச் சதம் சுப்பர் ஓவரினால் வீண்!

December 9, 2025

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இன்டர்நெஷனல் லீக் ரி20 கிரிக்கெட் போட்டியில் கல்வ் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடிவரும் பெத்தும் நிஸ்ஸன்க

na

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு; 2,086 வீரர்களுக்கு பதவி உயர்வு

December 9, 2025

இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவு விழா, சமூக, சுற்றாடல் மற்றும் நல்லிணக்க திட்டங்களை உள்ளடக்கியதாகவும், கடற்படை மரபுகள் மற்றும்

kot

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

December 9, 2025

மேல் கொத்மலை நீரேந்து பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதன் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு

anu

ஜனாதிபதி தலைமையில் நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

December 9, 2025

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (08) காலை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி

sr

காலநிலை; முக்கிய அறிவிப்பு

December 9, 2025

அடுத்த 36 மணி நேரத்திற்கு நடைமுறையாகும் வரையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று

ct

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்றுள்ள கடன்கள் தொடர்பில் கோரிக்கை

December 9, 2025

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நிலவிய அனர்த்த

tn

தமிழ்நாட்டிலிருந்து 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்கள்

December 9, 2025

இலங்கையில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்குவதற்கென அனுப்பப்பட்ட 700 மெற்றிக் தொன் நிவாரண உதவிப் பொருட்களை

indo

இந்தோனேசியாவில் தீ விபத்து!

December 9, 2025

இந்தோனேசியாவில் அலுவலகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் ஜகார்த்தாவில்

hatt

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் போக்குவரத்துக்கு தடை

December 9, 2025

நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினை தொடர்ந்து ஹட்டன், கண்டி பிரதான வீதியில் பல இடங்களில் போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும்

ind

பேரிடர் பணிகளுக்காக செயற்படும் இந்தியாவின் நான்கு போர்க் கப்பல்கள்

December 9, 2025

இலங்கையில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை ஆதரிக்க இந்திய கடற்படை மேலும் நான்கு போர்க்கப்பல்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது. இந்த