கனடா பிராம்ப்டனில் ஒரு வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பீல் பகுதிப் பொலிசார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் நேற்று திங்கட்கிழமை மாலை ஸ்டீல்ஸ் அவென்யூ நு அருகே உள்ள ஹ{ரோன்டாரியோ தெரு பார்ட்லி புல் பார்க்வே பகுதியில் இடம்பெற்றதாக பொலிஸ்தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்று சுமார் 7 (மாலை) மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்ட போது துப்பாக்கியால் சுடப்பட்டவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக கனேடிய காவல்துறை சமூக ஊடகப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.