இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரகால நிவாரண உதவிகளை வழங்கியமைக்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் விஜித ஹேரத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடினமான சூழலை எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் தமிழக அரசு வழங்கிய ஆதரவு மற்றும் வெளிப்படுத்திய தோழமை உணர்விற்கும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது நன்றி தெரிவித்தார்.
அத்துடன், இரு தரப்பிற்கும் இடையிலான மக்கள் ரீதியான தொடர்புகள் எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்றும், நல்லெண்ணம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வளரும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.