நேபாளத்தில் காணாமல்போயுள்ள அவுஸ்திரேலிய தமிழ் குடும்பம் – நம்பிக்கையுடன் காத்திருக்கும் உறவினர்கள்

நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளப் பெருக்கிற்குப் பிறகு, காணாமல்போன பல டஜன் ஆஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலியத் தம்பதியும் அவர்களின் இரு சிறு மகன்களும் அடங்குவதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சந்திரசேகரன் முரளிதரன் (47), அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் (42), மற்றும் அவர்களது மகன்களான அஸ்வின் (14), ஆருஷ் (11) ஆகியோர் ‘ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்’ (Himalayan Glacier Adventures) குழுவுடன் பயணித்த நிலையில், அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. […]

நேபாளத்தில் 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய அதிபர்

பாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பாடசாலையை நோக்கி ஆபத்தான முறையில் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் இருந்து, பாடசாலை அதிபரின் துரிதமான நடவடிக்கையால் 1,643 மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திரிசூலி பள்ளத்தாக்கில் உள்ள திரிபுவன் திரிசூலி இடைநிலைப் பாடசாலையின் ஆங்கில ஆசிரியரும் அதிபருமான 47 வயது ராஜேந்திர தவாடி, பாடசாலையில் இருந்தபோது இப்பகுதியில் மிகப்பெரிய வெள்ளம் வரவுள்ளதாக அவருக்கு எச்சரிக்கை வந்தது. உடனடியாக பாடசாலையைக் காலி செய்யும்படி அவர் உத்தரவிட்டு, நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் நிகழ்ந்த கொடூரமான திடீர் வெள்ளத்தில் […]

இலங்கை வடிவழகி காலமானார்

பிரபல இலங்கை வடிவழகியும் (மாடல்) நடமாடும் மேடை மற்றும் அழகுக் கலைப் பயிற்றுவிப்பாளருமான சுல்பத்மேந்திர குமாரபத்திரன தனது 46ஆவது வயதில் காலமானார். அவர் அண்மைய காலத்தில்கூட வடிவழகு மற்றும் அழகுக் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. எனினும், அவரது இறப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

யாழில் இருவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இருவேறு கொலை சம்பவங்களில் குற்றவாளிகளாக காணப்பட்ட இருவருக்கு, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி பி.எஸ். சூசைதாசன் மரண தண்டனை விதித்துள்ளார். திருநெல்வேலி பகுதியில், கடந்த 2012 ஆம் ஆண்டு மது போதையில் இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் 09 நபர்களை கைது செய்திருந்தனர். குறித்த 09 நபர்களையும், எதிரிகளாக பெயர் குறிக்கப்பட்டு, மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு […]

கரைச்சி மற்றும் கண்டாவளை; பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஆனையிறவு முதல் இரணைமடுச் சந்தி வரையான பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புகையிரதக் கடவைகளில் 14 கடவைகள் இன்று வரை பாதுகாப்பற்ற நிலையிலேயே காணப்படுகின்றன. இது குறித்து துறைசார் திணைக்களங்களுக்கு பலமுறை தெரியப்படுத்தப்பட்டும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நீண்டகாலமாக பிரஸ்தாபிக்கப்பட்டும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1980 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களைக் காரணம் காட்டி, பயன்பாட்டிலுள்ள புகையிரதக் கடவைகளைச் சட்டபூர்வமாக்குவதையும், அவற்றின் பாதுகாப்பை உறுதிசெய்வதையும் புகையிரதத் […]

19 வயது இளைஞன் நீரில் மூழ்கி மாயம்

ஹொரணை, நாரகல பாலத்திற்கு அருகில் களு கங்கையில் நீராடச் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். காணாமல் போன இளைஞனைத் தேடும் விசேட தேடுதல் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்குப் பிணை

விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, ரவி கருணாநாயக்க திங்கட்கிழமை (31) காலை சுமார் 8:15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்குச் சென்றார். அங்கு அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் […]

கோப்பாயில் மகளை வன்புணர்ந்த தந்தைக்கு சிறை!

ழ்ப்பாணத்தில் தனது சொந்த மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 16 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்தில் தந்தை கைது செய்யப்பட்டார். அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த வேளை தீர்ப்புக்காக கடந்த 28 ஆம் திகதி வழக்கு அழைக்கப்பட்டது. அதன் போது, எதிரியான தந்தையை குற்றவாளியாக கண்ட மன்று, 16 வருட சிறைத்தண்டனை விதித்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு […]

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் உயிரிழப்பு

களுத்துறை, பயாக்கல பகுதியில் நேற்று (31) இரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த 28 வயதுடைய நபர், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செம்மணி இனப்படுகொலைக்கு கனேடிய தமிழ் அரசியல்வாதிகள் ஆதரவா?: நீதன் ஷானைத் தவிர ஏனையோர் எங்கே? – வாக்களித்த கனேடியர்கள் கேள்வி!

செம்மணி இனப்படுகொலைக்கு நீதி கோரி BEHIND ME MEDIA நடாத்திய போராட்டத்தில் கனேடிய தமிழ் அரசியல்வாதிகளில் நீதன் ஷானை ஒருவரைத் தவிர ஏனைய கனேடிய தமிழ் அரசியல்வாதிகள் ஏன் இணைய மறுத்தார்கள்? அவர்கள் செம்மணி இனப்படுகொலைக்கு ஆதரவா? என வாக்களித்து கனேடிய பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த மக்கள் கேள்வியெழுப்பியுள்ளார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான நேற்று ஆகஸ்ட் 30 ஆம் திகதி BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் […]