நேபாளத்தில் இதுவரை 12,000 பேர் மீட்பு: 1,000 ஐ கடந்தது உயிரிழப்பு

நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனி பாறைகள் சரிந்ததால் கடந்த ஓகஸ்ட் 26 ஆம் திகதி போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுனாமியைப் போன்று தாக்கிய இந்த ஆற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பல்வேறு நீர்மின் […]
தந்தை செல்வாவின் நினைவுத் தூபி அடித்து நொறுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் இருந்த நினைவுத் தூபி இனம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. போருக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, போர் முடிவடைந்த பின்னர் குறித்த பகுதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2012ஆம் ஆண்டு மீளப் புனரமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வந்த தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அப்பகுதி மக்கள் மற்றும் அயலவர்கள் […]
பிள்ளையான் தொடர்ந்து விளக்கமறியலில்…

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு ஐந்து பேரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட மூன்று பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் செவ்வாய்க்கிழமை (01) காணொளி ஊடாக உத்தரவிட்டுள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டில், கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை, தமிழ் மக்கள் […]
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிவாஜிலிங்கம்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தற்போதைய வல்வெட்டித்துறை நகர சபையின் தவிசாளருமாகிய கௌரவ M.K.சிவாஜிலிங்கம் அவர்கள் கடந்த 11.06.2026 அன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நடைபெற்று அவருக்கான சிகிச்சைகளைத் தொடர்ந்து கொழும்பில் தங்கியிருந்து சிகிச்சை மேற்கொண்டிருந்த நிலையில் கடந்தவாரம் முதல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிதீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கணபதி அறநெறி நூலகத்திற்குப் புத்தகங்கள்

ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வி மற்றும் அறிவு வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் நன்னோக்கில், விசேட புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டம், அகலவத்தை பகுதியில் அமைந்துள்ள ‘டார்டன்பீல்ட் கணபதி அறநெறிப் பாடசாலை’ நூலகத்தை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ செயலகத்தின் பணிப்பாளர் திருமதி ஆர். எம். தர்ஷனா ரணசிங்க இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மாணவர்களின் வாசிப்புப் […]
விமானிகளின் இல்லத்தின் பவளவிழா

இலங்கை விமானப்படையின் பெருமைமிக்க விமானப் பாரம்பரியத்தின் இதயத்துடிப்பான, ‘விமானிகளின் இல்லம்’ என்று அழைக்கப்படும் இல. 01 விமானிகளின் பயிற்சிப் பிரிவு, தனது 75ஆவது ஆண்டு விழாவை 2026 செப்டம்பர் 01 அன்று சீனக்குடா விமானப்படை அகடமியில் கொண்டாடியது. ஏழரை தசாப்தங்களுக்கு மேலான நீண்ட வரலாற்றில், இராணுவ விமானப் பயிற்சித் துறையில் சிறப்பாக ஆற்றப்பட்ட இணையற்ற பணி பெருமையுடன் நினைவுகூரப்பட்டது. ராயல் விமானப்படையின் பிளைட் லெப்டினன்ட் நார்மன் லஷ் அவர்களின் தலைமையில், 1951 செப்டம்பர் 01 அன்று கட்டுநாயக்கவில் […]
ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்கள் குழு இலங்கை விஜயம்

ஜப்பானைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளும் முதலீட்டாளர்களும் கொண்ட பெருமளவிலான குழுவொன்று, முதல் முறையாக கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி பிற்பகலில் ஸ்ரீலங்கன் விமான சேவை மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவிவரும் நீண்டகால நட்புறவைப் புதுப்பிக்கும் வகையிலேயே இந்த ஜப்பானிய பிரஜைகளின் வருகை அமைந்திருந்தது. குறித்த குழுவினர், ஆகஸ்ட் 30 ஆம் திகதி பிற்பகல் 04:30 மணிக்கு ஜப்பானின் நரிட்டா விமான நிலையத்திலிருந்து ஸ்ரீலங்கன் விமான […]
சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு

அர்ஜென்டினாவின் நட்சத்திரக் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது “வேதனையான” ஒரு முடிவு என்றாலும், “அதற்கான நேரம் வந்துவிட்டது” என்பதைத் தான் புரிந்து கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கி சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த 39 வயதான மெஸ்ஸி, தனது நாட்டுக்காக 207 போட்டிகளில் விளையாடி 125 கோல்களை அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினா […]
புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு நிகழ்வானது, விருந்தினர்கள் மற்றும் சாதனையாளர் வரவேற்புடன் ஆரம்பமானது. தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், விருந்தினர்களது உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், […]
முன்னாள் மேயர் சடலமாக மீட்பு

ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் முதல் மேயரான எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் சடலம், கொழும்பு, திம்பிரிகட்டியாய பகுதியில் அவர் வசித்துவந்த வீடொன்றில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போதுள்ள தகவல்களின்படி, அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முன்னாள் நகரபிதா திடீரென காலமானார் என்பதை ஹம்பாந்தோட்டை மாநகரசபையின் தற்போதைய மேயர் டி. ஏ. காமினி உறுதிப்படுத்தியுள்ளார்.