அனுராதபுர யாத்ரீகர்கள் பஸ்ஸில் தீ!
கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து கல்குளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானதாக காவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் உள்ள கல்குளம் கட்டுமான இயந்திர ஆபரேட்டர்கள் கல்லூரிக்கு முன்னால் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, மேலும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினரும் அனுராதபுரம் நகராட்சி தீயணைப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து தீயை விரைவாக […]
மகா பருவ உர மானியம்

இதுவரை 226,015 விவசாயிகளுக்கு மகா பருவ உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 2214 மில்லியன் ரூபாவாகும். இதுவரை மானியம் பெறாத விவசாயிகளின் கணக்குகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பணம் வரவு வைக்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு , குரன பகுதியில், உள்ளங்கையில் மறைத்து வைக்கக்கூடிய சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி இதுவரை பாதுகாப்புப் படையினரிடமும் இல்லை என தெரியவந்துள்ளது. குறித்த துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை என தெரியவந்துள்ளது. வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் […]
பளை பொதுச்சந்தையில் வெள்ளம் தேக்கம்!
பச்சிலைப்பள்ளி பளை பொது சந்தை கடந்த இரு தினங்களாக பெய்த கன மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி சந்தை நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. இதனால் பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுத்தனசந்தைக்கு வருகை தருவது வழக்கமான விடயமாகும். ஞாயிற்றுக்கிழமை (16) மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றனர். பொது சந்தை சுற்றுச்சூழல் முழுவதும் வெள்ளம் வியாபித்து காணப்படுவதால் மக்கள் தமது […]
முதலாவது போட்டி இந்தியாவை வென்ற தென்னாபிரிக்கா

இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தாவில் புதன்கிழமை (14) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (16) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா: 159/10 (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 31, டொனி டி ஸொர்ஸி 24, வியான் முல்டர் 24, றயான் றிக்கெல்டன் 23, கைல் வெரைன் 16, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 15 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 5/27, குல்தீப் யாதவ் 2/36, மொஹமட் […]
இலுப்பைக்கடவை கடற்கரையில் டொல்பின் கூட்டம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றையதினம் சனிக்கிழமை (15.11.2025) பிற்பகல் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்துள்ளன. இந்தநிலையில், இதனை அறிந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் சென்று அவற்றை பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின் மீன்கள் விளையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. குறித்த டொல்பின் மீன் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் […]
போதைப்பொருள் தடுப்பு; அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை

அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், […]
அறுகம்பேயில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் ஒக்டோபர் 25 ஆம் திகதி அன்று வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொத்துவில் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ், விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், தகவல் தெரிந்தவர்கள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தை 063 2248022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071 8591168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் […]
புதிய முயற்சியாக கருப்பு கேரட் உற்பத்தி
தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். கேரட்… இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும். இது அனைவரும் அறிந்ததே…! ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது. அதுபற்றி தெரியுமா…? ஆம்…அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை. புதுடெல்லியில் இருந்து விதைகள் இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு […]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடிக்கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் இருந்த சந்தேக நபர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை வழங்கி வருவதாகவும் வழியில் அவருக்காக காத்திருந்த நிலையில் கைது […]