‘தேவா தேவாதான்’ – தேனிசைத் தென்றலுக்கு அஞ்சலிகள்!

தமிழ் திரையுலகில் தனக்கென்று தனித்த இடம் பிடித்த இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா நேற்று காலமானார். 400க்கும் மேலான திரைப் படங்களுக்கு பெருமைக்குரியவர் இசையமைப்பாளர் தேவா. சென்னை மயிலாப்பூரில் கடந்த 1950-ஆம் ஆண்டு பிறந்த தேவாவின் இயற்பெயா் சொக்கலிங்கம் தேவநேசன். சிறு வயதிலிருந்தே இசையில் ஆா்வம் கொண்டிருந்த அவா், தன்ராஜ் மாஸ்டரின் மேற்கத்திய இசை கற்று, லண்டன் டிரினிட்டி கல்லூரியில் இசைத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா். சென்னையில் பரவலாக பாடப்பட்ட கானா பாடல்களை, வெகுசன மக்களின் ரசனைக்கு […]

காவன்திஸ்ஸவின் மரணம் குறித்து விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

உயிரிழந்த ‘காவன்திஸ்ஸ’ என்ற தந்த யானையின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக மரண பரிசோதனை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கல்கமுவ நீதவான் உத்தரவிட்டுள்ளார். கல்கமுவ பதில் நீதவான் காஞ்சனா ஹத்துருசிங்கவினால் நேற்றைய தினம் (17) கால்நடை மருத்துவ அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, யானையின் மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிவதற்காகப் மரண பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், பரிசோதனையின் பின்னர் யானையின் உடலை வனஜீவராசிகள் […]

சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில்

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு உருவான பதற்றநிலைகளுக்கு மத்தியில், தேரருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, அவரை சத்தியாகிரகத்தில் ஈடுபட்டவர்கள் ‘சுவசரிய’ அவசர அம்பியூபுலன்ஸ் சேவை மூலமாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தற்போதைய அரசால் நாட்டை ஒரு அங்குலம் கூட முன்னேற்றிக் கொண்டு போக முடியவில்லை – திலித் ஜயவீர

நாட்டை ஓர் அங்குலம்கூட முன்னோக்கிக் கொண்டு செல்லத் தவறியுள்ள தற்போதைய அரசாங்கம், மகா சங்கத்தினரின் கோரிக்கைக்கு எதிராகவே கொழும்பில் மக்கள் பேரணிகளை ஏற்பாடு செய்து வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “இந்த அரசாங்கம் வந்தவுடன் ஏதோவொரு மாயம் நடக்கும், வெளிநாடுகளில் உள்ள ஊழல் பணம் மீட்கப்பட்டு அது எங்களிடையே பகிரப்பட்டு […]

போதைப்பொருள் பற்றிய இரசாயன பகுப்பாய்வு அறிக்கை – ஹர்ஷண நாணயக்கார

எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதியாகும் போது, மூன்று மாத காலப்பகுதிக்குள் அரச இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளும் வேலைத்திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – பெலவத்தையில் அமைந்துள்ள அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு மேற்கொண்ட அவசரக் கள விஜயத்தின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது போதைப்பொருள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை வெளியிடும் செயல்முறைகள் மற்றும் அதன் […]

நாமலின் செயலாளர் வீட்டில் சோதனை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளரின் கல்கிஸையிலுள்ள வீட்டில், இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (17) அதிகாலை வேளையில் விசேட சோதனையொன்றை மேற்கொண்டு அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் (Safe) ஒன்றை மீட்டெடுத்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கல்கிஸ்ஸ, டெம்ப்ளர்ஸ் மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். குறித்த வீட்டின் உரிமையாளர் சஞ்சய சமரசிங்க என்பவர் என […]

மஹிந்தவின் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தினால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வருமென்றார் பிரகீத் எக்னெலிகொட – விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடாத்தினால் நாட்டின் ஆட்சியினை மாற்றி நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என பிரகீத் எக்னெலிகொட தன்னிடம் கூறியதாக விடுதலைப் புலிகள் அமைப்பில் முன்னாள் உறுப்பினரான முரளி என்பவர் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதியன்று சாட்சியம் அளித்துள்ளார். பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு குறித்த வழக்கு அழைக்கப்பட்ட போதே இத்தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் […]