சபாநாயகருக்கு எதிராக சர்வதேச அமைப்புகளிடம் தயாசிறி முறைப்பாடு

சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சர்வதேச மட்டத்தில் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளார். இதன்படி, சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் (IPU), பொதுநலவாய பாராளுமன்ற சங்கம் (CPA) மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் அவர் எழுத்துமூலமான முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளார். கடந்த செப்டெம்பர் 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாம் முன்வைக்க முயன்ற சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்புவதற்கு சபாநாயகர் சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றும், அதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்து இந்த முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
22 சட்ட மூலத்தால் பாதிக்கப்படப் போவது நாங்கள்தான்

கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் வட்டாரபிரதேச சபை உறுப்பினர் ச.சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கையில இருக்கிற நீதிபதிகளுடைய வயதை கூட்டுகிறார்கள். 62 வயதோடு இருக்கிற நீதிபதியை 67 வயது வரைக்கும் கொண்டு வருகிறார்கள். மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் இரண்டு நீதிமன்றங்களுக்கும் வருகின்ற நீதிபதிகளின் […]
புத்தூரில் வயோதிப் பெண் மரக்கட்டையால் அடித்துக்கொலை!
அச்சுவேலி புத்தூர் பகுதியில் 74 வயதுடைய வயோதிப் பெண் ஒருவர் கதவுக்கு வைக்கப்படும் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர் மேற்கு சிவன் கோவில் வீதியிலுள்ள பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். வயோதிப தாயும், அவரது மகனும் வாழ்ந்து வந்த நிலையில் மகனின் மகனால் குறித்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்: பாதாள உலகக் குழு மோதலே காரணம்!

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வெளிக்கொணர்வதில் பொலிஸார் வெற்றியடைந்துள்ளனர். சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான படோவிட்ட அசங்க மற்றும் குடு அவிஷ்க ஆகியோரின் குழுக்களுக்கு இடையே நிலவிய பகையே இக்கைக்குண்டுத் தாக்குதலுக்குக் காரணம் என பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், குண்டுத் தாக்குதலை நடத்த வந்த சந்தேகநபர் மற்றும் முச்சக்கரவண்டி சாரதியின் தொலைபேசித் தரவுகள் மூலமும் பல தகவல்கள் பொலிஸாரால் பெறப்பட்டுள்ளன. மேலும், இத்தாக்குதலை நடத்துவதற்காக சந்தேகநபர்கள் நெதிமால ஆசிரி […]
மீனவர்கள் வலையில் சிக்கிய 300 கிலோ பிரம்மாண்ட ‘கொப்பரா’ மீன்!

மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மன்னார் மீனவர்களின் வலையில் நேற்று அதிகாலை ஆழ்கடல் மீனான “கொப்பரா” என அழைக்கப்படும் ஆழ்கடல் மீன் சிக்கியுள்ளது. சுமார் 300 கிலோ எடையுடைய குறித்த மீன் ஆழ்கடலில் வாழக்கூடியதுடன், தற்போது மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது. இது வேகமாக நீந்தக்கூடிய, நீளமான மூக்கையுடைய மீன் வகையாகக் காணப்படுகின்றது. வழக்கமான மீன்களை விட மிகப் பெரியதாகக் காணப்படுவதால், மீனவர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மீனுடன் மீனவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் […]
தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அப்கன்ட்றி லயன்ஸ்!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சுப்பர் லீக் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தனது கடைசி லீக் போட்டியில் றினோன் கழகத்தை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் எதிர்த்தாடிய அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் சுற்றில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணி என்ற பெருமையை தக்க வைத்ததுக்கொண்டது. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு கழகங்களும் சம அளவில் மோதிக்கொண்ட வண்ணம் இருந்தன. ஆனால், நேரம் செல்ல செல்ல அப்கன்ட்றி லயன்ஸ் […]