கொள்ளுப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு

கொள்ளுப்பிட்டி 6ஆவது ஒழுங்கையில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியொன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலியப் பெண்ணுக்கு இலங்கையில் பாலியல் தொல்லை: மூவர் கைது

63 வயது மதிக்கத்தக்க ஆஸ்திரேலியப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரின் அறைக்கதவின் கீழ் பாலியல் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்து ஆங்கிலத்தில் எழுதப்பட்ட துண்டுப்பிரசுரங்களைத் திணித்த குற்றச்சாட்டின் பேரில், மூன்று இலங்கை நபர்கள் உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகை தந்த குறித்த பெண், உனவட்டுனவில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தங்கியிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். தெஹிவலை மற்றும் பாணந்துறைப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த மூன்று சந்தேகநபர்களும், ஆஸ்திரேலியப் சுற்றுலாப் பயணி […]
சிறுவர்கள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகம்; 21 நாடுகளில் ஒரு வருடத்தில் 20 மில்லியனாகியது!

21 நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்தும் சுமார் 20 மில்லியன் சிறுவர்கள் ஒரு வருட காலத்தில் டிஜிட்டல் தளங்கள் ஊடாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட, இணையத்தைப் பயன்படுத்தும் சிறுவர்களில் ஐந்தில் ஒருவருக்கும் அதிகமானோர் கடந்த ஆண்டில் குறைந்தது ஒரு வகையான பாலியல் துஷ்பிரயோகத்திற்காவது […]
மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்கப்போவதில்லை?

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று பிற்பகல் 3.00 மணியுடன் நிறைவடைந்தது. இருப்பினும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல மனுதாரர் தரப்பினர் குறித்த மனுக்கள் தொடர்பான எழுத்துமூல சமர்ப்பணங்களை முன்வைக்கப்போவதில்லை என மனுக்கள் (Motions) மூலம் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையை சவாலுக்கு […]
வலி வடக்கு காணி விடுவிப்பு இம்மாத இறுதியில் சாத்தியம்!

யாழ். வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகள் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பாக ஜனாதிபதி பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் எப்போது காணி விடுவிப்பு சாத்தியம் என அவரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்ததாக எமது […]
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளருக்கு அழைப்பாணை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஆகிய இருவருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளர்களாக நீண்டகாலமாகப் பணியாற்றிய ஊழியர்கள், தற்போது வழங்கப்பட்டுள்ள நிரந்தர நியமனத்திற்கான உள்வாங்கலில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்குப் பதிலாகப் புதிதாகப் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தனர். குறித்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணைக்காக, எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 3:00 மணிக்கு இலங்கை […]
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பளையில் முகாமுள்ளதாகக் கூறியவரின் விளக்கமறியல் நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்புக்குச் சொந்தமான முகாம் ஒன்று பளைப் பாதுகாப்புக் காட்டில் உள்ளதாகப் போலியான செய்தியைப் பரப்பியதாகக் கூறி, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேகர, புதன்கிழமை (02) அன்று உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகத் தெரிவித்து, பயங்கரவாத விசாரணைப் பிரிவு முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்ததன் பின்னரே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு […]
டொராண்டோ மேயர் பதவிக்கு 53 பேர் போட்டி!

டொராண்டோ மேயர் பதவிக்கு 53 பேர் போட்டியிடுகின்றனர். 25 வார்டுகளில் 190 பேர் போட்டியிடுகின்றனர். முக்கிய வேட்பாளர்கள்: கிரிஸ் அலெக்சாண்டர் (Chris Alexander): அஜாக்ஸ்-பிக்கரிங் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் (2011-2015), குடியுரிமை மற்றும் குடியேற்ற அமைச்சர் (2013-2015). பிராட் பிராட்ஃபோர்ட் (Brad Bradford): வார்டு 19 பீச்சஸ்-ஈஸ்ட் யார்க் நகர சபை உறுப்பினர் (2018- முதல்), 2023 மேயர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு 8 ஆம் இடம் பிடித்தவர். ஒலிவியா சௌ (Olivia Chow): டொராண்டோ மேயர் (2023- […]
மனித உரிமை மீறல்கள்; சட்ட நடவடிக்கை எடுப்பதில் இலங்கை தவறிவிட்டது – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கடந்த காலத்தில் இடம்பெற்ற கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் ஆட்கடத்தல்கள் தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகக் குறைந்த முன்னேற்றத்தையே அடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்றை வெளியிட்டே அந்த அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற மற்றும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், படுகொலைகள் மற்றும் ஏனைய கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பயனுள்ள முறையில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதை உறுதி […]