காகிதத் தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீ

எம்பிலிபிட்டிய காகித தொழிற்சாலையின் கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ பரவாமல் தடுப்பதற்காகக் காகித தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு, இராணுவம், பொலிஸ், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை தொழிற்சாலையின் தீயணைப்புப் பிரிவு ஆகியவை இணைந்து தீவிர முயற்சி மேற்கொண்டு, தற்போது தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளன. காகித தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியிலேயே […]
இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரிப்பு

இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார். தெங்கு சார்ந்த உற்பத்திகள் 42 சதவீதமும், பழங்கள் 21 சதவீதமும், காய்கறிகள் 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது. எதிர்காலத்தில் நாட்டில் விவசாயத் துறைக்காக அதிகளவில் முதலீடுகள் இடம்பெறும் என பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார். இதன்போது […]
என்ன தடை வந்தாலும் 22வது அரசியலமைப்புத் திருத்தம் பின்வாங்கப் போவதில்லை

யார் என்ன தடைகளை ஏற்படுத்தினாலும் 22வது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவருவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையிலிருந்து ஓரடி கூட பின்வாங்கப் போவதில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். நேற்று (30) நடைபெற்ற, ‘நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி’ பதுளை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், “நாங்கள் ஆட்சிக்கு வரும்போது என்ன நிலைமை இருந்தது? முப்பது, நாற்பது ஆண்டுகளாக வழிதவறிச் சென்ற ஒரு அமைப்பினால் முழு […]
அரசாங்கம் சர்வாதிகாரத்தை செயல்படுத்தி வருகிறது

முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவும் செய்யாத அளவிலான சர்வாதிகாரத்தை தற்போதைய அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். மகாநாயக்க தேரர்களின் அனுசாசனையையும் ஏற்றுக்கொள்ளாத இடத்திற்கு தற்போதைய அரசாங்கம் வந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். புத்தலயில் நேற்று(30) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். சர்வஜன அதிகாரத்தின் மொனராகலை மாவட்ட தொகுதி தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று பிற்பகல் புத்தல சந்தை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு […]
டெங்கு அதி அவதான வலயங்களாக 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் இன்னமும் டெங்கு அதிஅவதான வலயங்களாகவே காணப்படுவதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்கள் தொடர்பான அண்மைய தரவுகளை வெளியிட்டு அந்தப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நடப்பு ஆண்டில் இதுவரை 95,174 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் 9,838 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இதுவரை 95,174 பேருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டுள்ளது. […]
அழுகிய நிலையில் மனிதத் தலை மீட்பு

மொரட்டுமுல்லை, மேல் இதிபெத்த குரே பகுதியில் மனிதத் தலை ஒன்று காணப்படுவதாக மொரட்டுமுல்லை பொலிஸாருக்கு 119 அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக நேற்று அழைப்பொன்று கிடைத்துள்ளது. குறித்த தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், அது மர ஆலை ஒன்றின் பின்புறமாக உள்ள ஆற்றங்கரைக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் மொரட்டுமுல்லை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தினேஷ் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். மொரட்டுமுல்லை பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கல்கிஸ்ஸை குற்றவியல் விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து களப் […]
இன்று மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடமேல் மாகாணத்தில் சிறிய அளவில் மழை பெய்யக்கூடும் என்பதுடன், ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக […]
பெற்றோல் விலை குறைப்பு

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 414 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். அத்துடன் 495 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 475 ரூபாவாகும். ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித […]