நேபாளம் – சீன எல்லை வௌ்ளப்பெருக்கு – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு

நேபாளம், சீன எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 600 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 2,500 பேர் மாயமாகியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்நிலையில், சேற்றில் சிக்கியிருந்தவர்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளதோடு, தவித்துக் கொண்டிருந்தவர்களை ஹெலிகொப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகளில் இரு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதியின் சீனப் பக்கத்தில் கடுமையாக சேதமடைந்த ஒரு சோதனைச் சாவடி பகுதிக்கு, கயிறுகள் மூலம் இறங்கி மீட்புக் […]
ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் மார்கரெட் சட்டெர்வெயிட் (Margaret Satterthwaite) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இலங்கை அரசாங்கம் தனது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் மூலம் […]
பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் நீதி அமைச்சரின் அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது என்றும், இந்த சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்து செய்யப்படும் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் நீக்கம் தொடர்பில் ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. […]