அமெரிக்க வரிகளுக்கு நிகராக ‘டாலருக்கு டாலர்’ பதிலடி கொடுக்க கனடா உத்தேசித்துள்ளதாக பிரதமர் கார்னி தெரிவிப்பு

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தியுள்ளதாகக் கெடு முடிவடைவதற்கு முன்னதாகப் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கனடியப் பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ளது. “அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்த நான் முடிவெடுத்துள்ளேன். மேலும் கனடாவின் பேச்சுவார்த்தையாளர்களை ஒட்டாவாவிற்குத் திரும்புமாறு உத்தரவிட்டுள்ளேன். கடைசி நிமிடம் வரை இந்த பேச்சுவார்த்தைகள் முழுவதிலும் கனடியர்களின் நலன்களைப் பாதுகாக்க அவர்கள் நேர்மையுடன் தீவிரமாக உழைத்துள்ளனர்” என்று பிரதமர் அலுவலகம் […]
கனடா, அமெரிக்கா இடையேயான கடைசி நேர வர்த்தக ஒப்பந்தம் தோல்வி: புதிய 50 சதவீத வரி விதிப்புகள் அமலுக்கு வந்தன

: ஆகஸ்ட் 22, 2026 பல வார தீவிர பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கனடாவும் அமெரிக்காவும் கடைசி நேர வர்த்தக ஒப்பந்தத்தை எட்டத் தவறிவிட்டன. இதன் விளைவாக, $28 பில்லியன் மதிப்பிலான கனடிய பொருட்கள் மீது புதிய 50 சதவீத வரி விதிப்புகள் இப்போது அமலுக்கு வந்துள்ளன. வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட தனித்தனி அறிக்கைகளில் கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இந்த அறிவிப்பை வெளியிட்டன. நமது தொழிலாளர்களையும் தொழில்களையும் பாதுகாப்பதற்காக “அந்த வரிகளுக்கு நிகராக […]
நீர்கொழும்பு சிறை மோதலில் உயிரிழந்த அதிகாரிகளுக்கான இழப்பீடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று சிறைச்சாலை தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, உயிரிழந்த ஒவ்வொரு அதிகாரியின் குடும்பத்தினருக்கும் மற்றும் பிள்ளைகளுக்கும் தலா 20 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்தின் போது சிறைச்சாலை அவசரப் பிரதிபலிப்பு தந்திரோபாயப் பிரிவைச் சேர்ந்த 10 அதிகாரிகள் உயிரிழந்தனர். இதற்கமைய, தேசிய காப்பீட்டு அறக்கட்டளை நிதியத்தின் அக்ஹார காப்பீட்டுத் தொகையின் கீழ் அவர்களது உறவினர்களுக்கு இந்த இழப்பீட்டுத் […]
24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும் மூவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட முழுமையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 753 ஆகும். நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தல், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய […]
தென் கொரியாவில் இரு விமானிகளைக் காப்பாற்றிய இலங்கையர்களுக்கு நீண்ட கால வதிவிட விசா!

தென் கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் கடலில் வீழ்ந்த விமானிகளில் இருவரின் உயிரைக் காப்பாற்றிய இரண்டு இலங்கையர்களுக்கு நீண்டகால வதிவிட விசா வழங்க தென் கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்நாட்டு ஊடகச் செய்திகளின்படி, 2022 ஓகஸ்ட் 12 ஆம் திகதி சியோல் நகருக்குத் தெற்கே சுமார் 45 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள ஹ்வாசாங் கடற்கரைக்கு அப்பால் உள்ள மஞ்சள் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த மூன்று இலங்கையர்களால் இந்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்தவுடன் உடனடியாகச் […]
யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பிற்குள்ளான பலர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம், பண்டத்தரிப்பு பிரான்பற்று பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் நடைபெற்ற திருவிழாவின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் மற்றும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் காரணமாக கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினால் 166 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் அதிகளவான சிறுவர்களும் பெண்கள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆலய உற்சவத்தின் போது அதிகளவில் வானவேடிக்கைகள் வெடிக்கப்பட்டதுடன், இசை நிகழ்வின்போதும் அதிக சக்தி கொண்ட லேசர் ஒளிக்கீற்றுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதன் காரணமாக பலருக்கு கண்களில் எரிச்சல், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட […]
பல்லேகம ஹேமரத்தின தேரருக்கு VIP நுழைவாயில்?

முன்னாள் அத்தமஸ்தானதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், குழந்தை துஷ்பிரயோகம் தொடர்பான ஒரு வழக்கில் நேற்றையதினம்(21) நீதிமன்றத்திற்கு சென்ற போது அவர் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் சென்ற விடயம் பேசுபொருளாக மாறியுள்ளது. பல்லேகம ஹேமரத்தன தேரர் தனது சட்டத்தரணியின் காரில் நீதிமன்ற வளாகத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையிலே, பல்லேகம ஹேமரத்ன தேரர் மாத்திரம் எப்படி பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் நேரடியாக நீதிமன்றத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அத்தோடு, நீதிபதியின் நுழைவாயில் ஊடாக செல்வதற்கு சந்தேகநபரான பல்லேகம […]
அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்
விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று(21) பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம் எனக் […]
பிரதமர் இன்று யாழ். விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளார். பல்கலைக்கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கிலேயே அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்றார். இந்த நிகழ்வுகள் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளன. அதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மஹோற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், பிரதமர் ஆலயத்துக்கு வருகை தந்து வழிபாடு செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.