புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புகளைத் திருப்திப்படுத்தவே 22 ஆவது திருத்தம்!

புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காகவும், நாட்டைப் பிளவுபடுத்திச் சமஷ்டி ஆட்சி அரசியலமைப்பு முறைமையை அமுல்படுத்துவதற்காகவுமே அரசியலமைப்பில் 22ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாட்டுக்கு எதிரான இந்தத் திருத்தத்தை நாம் கடுமையாக எதிர்ப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(18) அன்று நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், “அரசியலமைப்பில் […]
மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நியூசிலாந்து தேசத்தில் வசித்து வரும் ஜேம்ஸ் பத்மநாதன் பிரேம்குமார் தலைமையில் நியூசிலாந்து தேசத்தில் இருந்து வருகை தந்த மருத்துவர்கள் அடங்கிய குழுவினரின் இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை(18) விடத்தல்தீவு புனித அடைக்கல மாதா தேவாலய வளாகத்தில் இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாமில் நீரிழிவு நோய் (Diabetes), தைராய்டு (Thyroid) தொடர்பான பிரச்சினைகள். பிட்யூட்டரி- (Pituitary) சுரப்பி தொடர்பான, கேபர்கோலின் (Cabergoline) சிகிச்சை தேவைப்படுபவர்கள், ஆஸ்துமா (Asthma / COPD) (நாள்பட்ட நுரையீரல் அடைப்பு […]
கனடாவுக்கு சட்டவிரோதமாக இலங்கையர் புலம்பெயர்வது குறித்த சந்திப்பு

கனடா எல்லைப் பாதுகாப்பு முகமையின் (CBSA) இணைப்பு அதிகாரி திருமதி கசுமி குபோ (Kazumi Kubo) மற்றும் செயல்பாட்டு இணைப்பு உதவியாளர் திருமதி நதீகா சமரக்கொடி ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவினர் நேற்று செவ்வாய்க்கிழமை (18) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, அண்மைக் காலங்களில் கனடாவிற்கு மேற்கொள்ளப்படும் சட்டவிரோத புலம்பெயர்வுகளினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும், அவற்றை எதிர்காலத்தில் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபரால் […]