வலி. வடக்கு; காணிகளை விடுவிக்க கோரி மக்கள் 17 ஆவது வாரமாக போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ” பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 17ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. […]

சிறுவர் சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். இவ்வாறான குற்றங்களில் ஈடுபடும் பெற்றோருக்கு, தண்டனைச் சட்டக்கோவையின் படி 2 ஆண்டுகளுக்கு மேல் 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என்றும் சட்டத்தரணி சஜீவனி அபேகோன் குறிப்பிட்டார்.

செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி ; “நீதியின் ஓலம் 2”

செம்மணிப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி, “நீதியின் ஓலம் 2” கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வௌ்ளிக்கிழமை (14) முதல் ஆரம்பமாகவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை (13)  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஏற்பாட்டுக் குழுவினர் கருத்துத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: “தமிழர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இனவழிப்பின் சாட்சியாக, யாழ்ப்பாணம் செம்மணியில் அகழ்ந்தறியப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து 544-க்கும் மேற்பட்ட எலும்புத் தொகுதிகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. செம்மணி […]

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம்: பாதிக்கப்படும் பகுதிகளை நேரடியாகப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார்.” பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள 5000-க்கும் அதிகமான தென்னை மரங்கள் அழிக்கப்படுவதோடு, அதனை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களின் வாழ்க்கைத் தரமும் முற்றுமுழுதாகப் பாதிக்கப்படும். கள […]

இலங்கையில் மரண தண்டனை நடைமுறை; GSP+ சலுகைக்கு சிக்கல்?

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தும் அரசாங்கத்தின் முன்மொழிவானது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது ஜி.எஸ்.பிளஸ் (GSP+) வர்த்தகச் சலுகையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அதன் லாபியிங் (lobby) முயற்சிகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஐரோப்பிய ஒன்றியம் மரண தண்டனையைத் பாரம்பரியமாக எதிர்த்து வந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர், ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) இந்த முடிவை அறிவித்தது. 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியை உள்ளடக்கிய இலங்கை […]

உயர்தரப் பரீட்சை; ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்குமாறும் அறிவுறுத்தல்

தற்போது நாடு முழுவதும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், பரீட்சார்த்திகளின் நலனைக் கருத்திற்கொண்டு ஜும்ஆப் பிரசங்க நேரத்தைச் சுருக்கிக்கொள்ளுமாறும், பள்ளிவாசல்களில் வெளிப்புற ஒலிபெருக்கிப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள சகல பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கும் அறங்காவலர்களுக்கும் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவர்கள், பரீட்சை நிலைய மேற்பார்வையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் நலன்கருதி, […]

கத்தோலிக்க சபையுடன் கலந்துரையாடல்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் இணைத் தலைமையில் கத்தோலிக்க சபையுடனான கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட கத்தோலிக்கப் பாடசாலைகளின் நிர்வாகச் சிக்கல்கள், கத்தோலிக்க மதத்திற்கான ஆசிரியர்கள் தொடர்பான பொறிமுறையினைத் தயாரித்தல், ஆசிரியர் தொழிலுக்காக கத்தோலிக்கத் கன்னியாஸ்திரிகளையும் அருட்தந்தைமார்களையும் உள்வாங்குவது குறித்த தற்போதைய முன்னேற்றங்களை மீளாய்வு செய்தல் என்பன இதன்போது இடம்பெற்றன. மேலும், அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட பாடசாலைகளின் செயற்பாடுகள் […]

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உயிருக்கு ஈரானால் ஆபத்து?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் திட்டமிட்டுள்ளதாகக் கூறி, கடந்த ஆண்டில் இஸ்ரேலிடமிருந்து அமெரிக்காவிற்குப் பல எச்சரிக்கைகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளால், வௌ்ளை மாளிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த தகவலுக்கான எவ்வித ஆதாரமும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுக்கு உறுதியாக கிடைக்கவில்லை என அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டு, சில சந்தர்ப்பங்களில் இஸ்ரேலிய அதிகாரிகளால் வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நேரடியாகத் […]

மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் கைது

சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ‘நாடே ஒன்றாக’ தேசிய திட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக நேற்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் 26 சம்பவங்களில் 573 வெளிநாட்டவர்களும், 2025 ஆம் ஆண்டில் 2 சம்பவங்களில் 26 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக […]

ரொனால்டோ தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிகஸை மணந்தார்

கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை மணந்துள்ளார். 41 வயதான போத்துக‌ல் உதைபந்தாட்ட நட்சத்திரமும், 32 வயதான மாடலும் ஆகஸ்ட் 11 ஆம் திகதி போத்துகலின் கஸ்காய்ஸ் நகரில் ஒரு விழாவில் திருமணம் செய்துகொண்டனர். பீப்பிள் பத்திரிகையின்படி, இந்த விழா தம்பதியரின் ஐந்து குழந்தைகள் மட்டும் கலந்துகொண்ட ஒரு தனிப்பட்ட மற்றும் நெருக்கமான தருணமாக இருந்தது. பின்னர் ரொனால்டோ, திருமண மோதிரங்கள் அணிந்த அவர்களின் கைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ஓகஸ்ட் 11, 2025 […]