ஹோர்முஸ் நீரிணை உடனே திறக்கப்படாது – ஈரான்

ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாடு தொடர்பாக ஓமானுடன் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் நிலையை நெருங்கியுள்ள போதிலும், அந்த நீர்வழியை மீண்டும் திறப்பதற்கு அதுமட்டுமே போதுமானதாக இருக்காது என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அங்கு ஈரான் மற்றொரு கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியம் தெரிவித்துள்ளது. நீரிணையின் இருபுறமும் அமைந்துள்ள ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையே விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் என்றும், இதன் மூலம் வழமையான எண்ணெய் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்றும் அமெரிக்க அதிகாரி ஒருவர் […]

இன்று தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 2,723 பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறவுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சைக்கு 294,089 மாணவர்கள் தோற்றவுள்ளனர். சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் இதில் அடங்குவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது. பிள்ளைகளின் மன ஏகாகிரதையைப் பேணி, கவனத்துடன் பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கு இலகுவாக இருக்கும் வகையில், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக பரீட்சை நிலையங்களைச் சென்றடையுமாறு பரீட்சைகள் திணைக்களம் […]