பொதுத் திறைசேரி நிதி மாயமான சம்பவம் குறித்து பலரிடம் வாக்குமூலம் பதிவு

பொதுத் திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை சைபர் குற்றவாளிகள் திருடிய சம்பவம் தொடர்பாக இதுவரை 91 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். விசாரணைகளின் முன்னேற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், பொதுத் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களம், அரச கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் மத்திய வங்கி ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளிடம் இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். […]
ஹோர்முஸ் நீரிணை பாதை தொடர்பில் ஈரானும், ஓமானும் இணக்கம்

ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கான புவியியல் எல்லைகள் குறித்து ஈரானும் ஓமானும் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில மூன்றாம் தரப்பினர் தலையிடாவிட்டால் இதற்கான கூட்டு அறிவிப்பொன்று இறுதி செய்யப்பட்டு வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பஹாயி தெரிவித்தார். ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த குறித்த நீர்வழியில் பாதுகாப்பிற்குத் தாமாகவே உத்தரவாதமளிக்காது எனவும் பஹாயி மேலும் குறிப்பிட்டார். ஈரானுக்கு இதுவரை வழங்கப்பட்ட மிகப்பெரிய […]
மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு இந்தியா கோரிக்கை

இலங்கையில் மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை நிறைவேற்றுமாறு இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிக்கையொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது. உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஜனாதிபதி, பிரதமர், வௌிவிவகார அமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடிருந்தார். இந்நிலையில் அவரது இந்த விஜயத்தின் போது, மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கான தமது வாக்குறுதியை […]