சக மாணவர்களுக்கு கஞ்சா விற்ற மாணவனுக்கு அபராதம்

சக மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கடத்தல் சிகரெட்டுகளை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட பல்கலைக்கழக மாணவருக்கு, குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சத்தரசிங்க ரூ.410,000 அபராதம் விதித்தார். சந்தேக நபர் பலாங்கொடையைச் சேர்ந்தவர் மற்றும் வடமேற்கு பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஆவார். புகையிலை வரி அவசரச் சட்டத்தை மீறி, நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 254 கிராம் கஞ்சா மற்றும் 500 வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்ததாகவும், அவற்றை விற்றதாகவும் அவர் மீது பொலிஸார் குற்றச்சாட்டு பதிவு செய்திருந்தனர். பல்கலைக்கழகத்தின் […]

சீரற்ற வானிலை; சிவனொளிபாத மலையில் மண்சரிவு

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக சிவனொளிபாத மலையின் உச்சியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது. மண்மேடு சரிந்து சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ளதாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்போதைய பருவகால யாத்திரையல்லாத காலத்தில் சிவனொளிபாத மலையின் உச்சிக்கு செல்லும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இடிக்கட்டுபான ஊடாக இரத்தினபுரி பாதைக்குச் சென்று அதனை அடைய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சீரற்ற வானிலை நிலைமை குறைந்து சீரான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் அப்பாதையில் சரிந்து […]

வளி மாசடைவினால் வருடாந்தம் 7000 மரணங்கள் பதிவு?

வளி மாசடைவதன் காரணமாக நாட்டில் வருடாந்தம் சுமார் 7,000 மரணங்கள் பதிவாவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சின் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் சாந்தனி விதான, உலகளாவிய ரீதியில் வருடாந்தம் 7 முதல் 8 மில்லியன் வரையான மக்கள் வளி மாசடைவதன் தாக்கங்களால் உயிரிழப்பதாகக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உலகில் வளி மாசடைவு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. […]

குளவி கொட்டுக்கு இலக்கான 50 மாணவர்கள் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்காகி திருகோணமலை பாடசாலை ஒன்றின் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை திவுல்வெவ மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாடசாலைக் கட்டடத்தில் இருந்த குளவிக் கூடு கலைந்தமையினால் மாணவர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக மஹதிவுல்வெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர்களில் மூன்று மாணவிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவில் விபத்தில் சிக்கிய இந்திய மீனவர்களை மீட்க நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் அனர்த்தத்திற்குள்ளான படகில் இருந்த 11 இந்திய மீனவர்களை மீட்கும் பணிகளை கடற்படை ஆரம்பித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகு ஒன்று நேற்றிரவு சீரற்ற வானிலை காரணமாக அனர்த்தத்திற்குள்ளானது. இந்தப் படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனர்த்தத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மீனவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான பணிகளில் இலங்கை கடற்படை ஈடுபட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

ஸ்பேஸ் எக்ஸ் ரொக்கெட்டின் பாகம் நிலவில் மணிக்கு 5,400 மைல் வேகத்தில் மோதியது!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ரொக்கெட்டின் கைவிடப்பட்ட மேல் பகுதி இன்று (05) புதன்கிழமை நிலவின் மேற்பரப்பில் மணிக்கு 5,400 மைல் (மணிக்கு 8,690 கி.மீ) வேகத்தில் திட்டமிடப்படாத வகையில் மோதியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அயர்லாந்து நேரப்படி இன்றைய தினம் காலை 7:35 மணிக்கு (இலங்கை நேரப்படி மதியம் 1:05 மணியளவில்) நிலவின் வட அரைக்கோளத்தில் உள்ள ஈன்ஸ்டீன் பள்ளத்திற்கு அருகில் இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. கடந்த 2025 ஜனவரியில் இரண்டு நிலவுக் […]

தெமட்டகொடை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்தேகநபர் கைது!

தெமட்டகொடை – குப்பியாவத்தை பகுதியில் நபரு ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 2026 ஜூலை 23 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இது குறித்து பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (05) லேக் டிரைவ் பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை […]

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டம்; செம்மணி எழுச்சி – அணையா தீபம் விழித்தெழு தமிழா!

கனேடிய மண்ணில் மாபெரும் கண்டனப் போராட்டமான ‘விழித்தெழு தமிழா!’ நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது. செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் என்புக் கூடுகளாக மீட்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு உறவுக்கும் நீதி கேட்டு ‘செம்மணி எழுச்சி – அணையா தீபம்’ மாலை 5 மணியிலிருந்து ALBERT CAMPBELL SQUARE, 150 Borough Dr, Scarborough, ON M1P 0B1 என்ற முகவரியில் BEHIND ME MEDIA மற்றும் BEHIND ME FOUNDATION ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. […]

பழங்குடி மக்களின் பாரம்பரிய விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர்

கிழக்கு மாகாணத்தின் பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியத்தையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் பழங்குடியினரின் பாரம்பரிய விழா, புதன்கிழமை (05) மூதூர் நல்லூர் பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர, கடற்பழங்குடியினர் சமூகத்தின் கலாச்சார அடையாளம், பாரம்பரிய வாழ்க்கை முறை மற்றும் மூதாதையர் அறிவைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியின் போது, பாரம்பரிய மத சடங்குகள், கலாச்சார கூறுகள், சமூகத் தலைவர்களின் ஆசிகள் மற்றும் கடற்பழங்குடியினரின் […]

டிரம்ப்பின் கோல்ஃப்பில் ஆயுதத்துடன் இருந்தவர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலிபோர்னியா மாநிலத்திற்கு வருகை தருவதற்கு முன்பாக, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள டிரம்ப் நேஷனல் கோல்ஃப் கிளப் (Trump National Golf Club) பகுதிக்கு வெளியே ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நபர் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு ஏதேனும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாரா என்பது குறித்து இரகசிய சேவைப் பிரிவு (Secret Service) விசாரணை […]