டெய்லர் ஸ்விஃப்ட் கச்சேரி டிக்கெட் மோசடி: $265,000க்கும் அதிகமான தொகையை ஏமாற்றிய ஒன்டாரியோ தம்பதியினர் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்!

டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) டொராண்டோ ‘ஈராஸ் டூர்’ (Eras Tour) இசைக்கச்சேரிக்கு முன்னதாக, $265,000க்கும் அதிக மதிப்புள்ள போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்ததை ஹாமில்டன் (Hamilton) பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ஒப்புக்கொண்டுள்ளனர். இது குறித்து சீன் லீதாங் (Sean Leathong) விவரிக்கிறார். டெனிஸ் டிசோர் (Denise Tisor) மற்றும் அவரது சட்டப்பூர்வமற்ற கணவரான டேவிட் பிளேக் (David Blake) ஆகிய இருவரும், டெய்லர் ஸ்விஃப்ட்டின் இசைக்கச்சேரிக்கான போலி டிக்கெட்டுகளை விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றி, $265,000க்கும் […]

அரையிறுதில் மோதும் ஆர்ஜென்டீனா – இங்கிலாந்து

ஐக்கிய அமெரிக்காவில் வியாழக்கிழமை (16) நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறவுள்ள உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனாவும் இங்கிலாந்தும் நேருக்கு நேர் மோதுகின்றன. உலகக் கிண்ண அரையிறுதி என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது, ஆனால் இந்த இரண்டு அணிகளும் மோதும் போட்டி என்பது வெறும் கால்பந்தையும் தாண்டி பல தசாப்த கால அரசியல் பின்னணிகளையும் வரலாற்று மோதல்களையும் கொண்டது. 1966 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து பெற்ற வெற்றி, 1982 போக்லன்ட்ஸ் போர் ஏற்படுத்திய அரசியல் தாக்கம், 1986-இல் டியகோ […]

நீர்கொழும்பு மேயர் ராஜினாமா

நீர்கொழும்பு மாநகரசபையின் மேயர், சட்டத்தரணி ரொபர்ட் ஹின்கெந்த, தனது மேயர் பதவியிலிருந்து விலகுவதாக புதன்கிழமை (15) மாலை அறிவித்தார். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர், அவர் மேயராக பதவியேற்றிருந்தார். தமது தீர்மானம் முற்றிலும் ஒரு தனிப்பட்ட முடிவு என்று குறிப்பிட்ட ஹின்கெந்த, “தேசிய மக்கள் சக்தியின் அரசியல் அதிகாரக் கட்டமைப்பினால் நான் எவ்வாறு நீர்கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு நியமிக்கப்பட்டேனோ, அதேபோல எதிர்காலத்தில் புதிய மேயரொருவர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவார்” என்றும் தெரிவித்துள்ளார்.

‘பசுமை எரிசக்தித் தீவுகள்’ – எரிசக்தித் திட்டங்களை மீண்டும் தொடங்கத் தீர்மானம்

நெடுந்தீவு, அனலைதீவு மற்றும் நயினாதீவு ஆகியவற்றை ‘பசுமை எரிசக்தித் தீவுகளாக’ (Green Energy Islands) மேம்படுத்துவதற்கும், ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வலுசக்தி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். இந்தத் தீவுகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கலப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைமை (HRES) திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த பின்னரே ஜனாதிபதி இந்தப் பணிப்புரையை வழங்கினார். வலுசக்தி அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் […]

மாவட்ட விவசாய விசேட குழு கூட்டம்

மன்னார் மாவட்டத்தின் விசேட மாவட்ட விவசாய குழு கூட்டம் மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை 4 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. எல்நினோ (EL Nino) காலநிலை தாக்கம் விவசாயத் துறையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில், அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு, விவசாயிகளுக்கு போதிய அறிவுறுத்தல்களும் விழிப்புணர்வையும் வழங்கி, அதன் ஊடாக இந்த கால நிலைக்கு சவாலை ஏற்றுக்கொண்டு, அதற்கு ஏற்ற பயிர்ச்செய்கை திட்டமிடலை மேற்கொள்வதற்கான […]

பொலிஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

கட்டுநாயக்கவின் கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் (15) மினுவாங்கொடவின் தேவோலபோல பகுதியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல்காரரான அந்த சந்தேக நபர், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பொலிஸ் அதிகாரிகளால் துரத்திப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர், அவரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துவர ஒரு […]