சுரேஷ் சலேவின் மனுவை நிராகரிக்குமாறு கோரி பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் இடைமனு தாக்கல்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தாக்கல் செய்த மனுவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அதிவணக்கத்திற்குரிய மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இடைமனு (Intervening petition) ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். தனது இந்த இடைமனுவின் மூலம், சுரேஷ் சல்லேவின் மனு தொடர்பாக நீதிமன்றத்தில் […]
சர்வதேச பாடசாலை ஆசிரியையும் அவரது கணவரும் போதைப்பொருள் விநியோக குற்றத்தில் கைது
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை மற்றும் அவரது கணவர் ஆகியோர் 2 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, சந்தேகநபரான ஆண்டமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலதிக […]
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரிப்பு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 72,430 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்று (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,160 ஆகும். அத்துடன், தென் மாகாணத்தில் 11,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 நோயாளர்களும், மத்திய […]
எதிர்க்கட்சிகள் பிளவடைவதற்கான அறிகுறியா தமிழ் மற்றும் முஸ்லிம் 6 கட்சிகளின் ஒன்றிணைவு?
ஐக்கிய மக்கள் கூட்டணியில் செயற்பட்டு வந்த 6 தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொதுவானதொரு மேடையின் ஊடாக தங்களது பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு முன்வைக்க தீர்மானித்துள்ளமையானது, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில், வரவிருக்கும் மாகாண சபைத் தேர்தலொன்றில் பிரதான எதிர்க்கட்சி மேலும் பிளவடைவதற்கே இது வழிவகுக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது. மாகாண சபைத் தேர்தலை எவ்வித தாமதமுமின்றி நடத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் […]
23ஆம் திகதி பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்பதா? இல்லையா? என்பது குறித்த உத்தரவு இந்த மாதம் 23ஆம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது. பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவ, மாணவிகள் குழுவொன்றினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (16) அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, மனுதாரர் தரப்பு மற்றும் சட்டமா அதிபர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை […]
மருதமுனையில் கோர விபத்து – ஸ்தலத்திலேயே அரசு உத்தியோகத்தர் பலி

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில், மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (16) காலை இடம்பெற்ற கோர விபத்தில் அரசு உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கல்முனைப் பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த அரசு உத்தியோகத்தர், கதிர்காமம் நோக்கிச் சென்ற பேருந்துடன் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் மட்டக்களப்பு, நொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்தவரும், வயது 36 வயதான இளைஞன் […]
பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் முதலாவது கூட்டம்

இலங்கை – தென்னாப்பிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவின் முதலாவது கூட்டம் குறித்த சங்கத்தின் தலைவரும், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தென்னாபிரிக்காவின் இலங்கைக்கான தென்னாபிரிக்க பிரதி உயர்ஸ்தானிகரும் அரசியல் ஆலோசகருமான இந்தெபிசெங் ரமஷிலா, இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளையும் பாராளுமன்ற ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்துவதற்கான தென்னாப்பிரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். வரவேற்புரையாற்றிய சங்கத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா […]
ஈரானை அடுத்த 3 நாட்களுக்குள் கடுமையாகத் தாக்குவோம் – ட்ரம்ப்

அமெரிக்க இராணுவம் அடுத்த 3 நாட்களுக்கு ஈரானை கடுமையாக தாக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உயர்மட்ட அளவிலான பேச்சுவார்த்தையை நடத்தினார். இதன்போது, ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல் போக்குவரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் ஈரானை பலவீனப்படுத்துவதே இதன் நோக்கம் என அவர் தெரிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்புக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்தால் வரும் நாட்களில் இராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றும், தொடர்ந்து […]
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு மரண தண்டனை

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், கடந்த 2011ஆம் ஆண்டில் ஹலம்பகே சந்துன் சம்பத் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு பலபிட்டிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சுமார் 15 வருடங்களாக நீடித்த இந்த நீண்ட வழக்கு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி ருசிர வெலிவத்த நேற்று (15) அறிவித்தார். முதலாம் எதிரியான வஹும்கபுரக திலக் புஷ்பகுமார மற்றும் இரண்டாம் எதிரியான வீரதுங்க சமிந்த ஆகிய இருவருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களுக்கு […]
8 வயதுச் சிறுவன் காரைக் கொளுத்தினார்?

குருநாகலில் உள்ள பாடசாலை ஒன்றின் வளாகத்தில் சொகுசு கார் ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் தொடர்பாக, 8 வயது சிறுவன் ஒருவன் காரைக் கொளுத்தியதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரமற்றது என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், கடந்த ஜூலை 3 ஆம் திகதி குருநாகல் பகுதியில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 1.4 கோடி ரூபா பெறுமதியான […]