யாழில் தனியார் காணிகளை கையகப்படுத்த போலி ஆவணங்களுடன் சுற்றும் மோசடி கும்பல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது. இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , உன்னுடைய காணி […]

கோவில்கள் பெயரில் மாற்றம் செய்யப்பட்ட நிலங்கள்: தடை நீக்க உத்தரவை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது

சென்னை: கரூர் மாவட்டத்தில் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாக ஏழை மக்கள் அனுபவித்து வந்த சுமார் 3,084 ஏக்கர் நிலங்கள் மீதான விற்பனைத் தடையைத் தமிழ்நாடு அரசு நீக்கியுள்ளது. இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், மக்களின் நில உரிமை மற்றும் குடியிருப்பு உரிமை பாதுகாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கோயில் நிலங்கள் என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டங்களை முறியடிக்க இது […]

ஊட்டி, கொடைக்கானலில் இயந்திரம் மூலம் பால் விநியோகம் | உயர்நீதிமன்றத்தில் ஆவின் நிறுவனம் தகவல்

சென்னை: மலைவாசஸ்தலங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாகத் தவிர்க்கும் நோக்கில், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் தானியங்கி பால் விற்பனை இயந்திரங்களை அமைக்கப்போவதாக ஆவின் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரதசக்கரவர்த்தி அமர்வு பிறப்பித்த உத்தரவின்படி, இந்தச் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் தலா 3.60 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மக்கள் நெருக்கம் மிகுந்த இடங்களில் […]

கோயில் நிலத்தில் ஒரு அங்குலம் கூட யாருக்கும் விட்டுத்தரமாட்டோம் | அமைச்சர் ரமேஷ் உறுதி

சென்னை: பழனி கோயில் நிலப் பதிவு விவகாரம் தொடர்பாகத் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் ரமேஷ் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் பேசுகையில், பழனி கோயில் நிலம் தொடர்பாகப் பரப்பப்படும் அவதூறு தகவல்களை மறுத்ததுடன், கோயில் நிலங்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். முறைகேடாக நிலத்தைப் பதிவு செய்ய உதவிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தனியார் தரப்பினரும் மீது வழக்குப்பதிவு […]

திமுக-அதிமுக ஒருங்கிணைப்பாளர் போல ராஜேந்திர பாலாஜி பேசுகிறார் – அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துத் துறை சார்ந்த வளர்ச்சிப் பணிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து விளக்கமளித்தார். எண்ணூர் மற்றும் வட சென்னை அனல் மின் நிலையங்களால் மீனவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், உப்பூர் அனல் மின் நிலையம் விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னை மாநகரில் மின் தடைகளைச் சரிசெய்ய ஒயர்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றார். அரசியல் விமர்சனங்கள் குறித்துப் […]

நாகர்கோவிலில் சிறை கைதியை கொன்ற காவல்துறையினரைப் பாதுகாப்பதா? – சீமான் கண்டனம்

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் என்ற மாற்றுத்திறனாளி கைதி உயிரிழந்த விவகாரத்தில், த.வெ.க. அரசுக்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார். சிறையில் கைதி உயிரிழந்தது காவல்துறை செய்த பச்சைப்படுகொலை என்று கூறிய அவர், காவலர்களைக் காப்பாற்ற அரசு முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியாக இருந்தபோது காவல் மரணங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்த முதலமைச்சர் விஜய், தற்போது மௌனம் காப்பது அதிகாரத்திமிர் என்று அவர் விமர்சித்துள்ளார். […]

(no-name)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் ஏற்பட்ட கலவரத்தில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட பதிவான உயிரிழப்புக்களானது ஒட்டுமொத்த நாட்டையும்  உலுக்கியுள்ளதாக ஜனநாயகவாத கூட்டு எதிர்க்கட்சி விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலைக் கட்டுப்படுத்த ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதை வரவேற்கும் அதேவேளை, வன்முறையைத் தடுக்கத் தவறிய சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியப்போக்கு மற்றும் மறைமுக நோக்கங்கள் குறித்து கூட்டு எதிர்க்கட்சி பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இன்று புதன்கிழமை (15) […]

யாழ். காரைநகரில் வெளிநாட்டவர்களின் நகைகள், பணங்களை திருடிய குற்றத்தில் இருவர் கைது

புலம்பெயர் நாடுகளில் இருந்து விடுமுறைகளை கழிக்க தமது சொந்த இடமான யாழ்ப்பாணம் காரைநகர் பகுதிக்கு வந்திருந்த குடும்பத்தினர்களின் வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகரில் புலம்பெயர் குடும்பத்தினர் தங்கி இருந்த வீடொன்றில் 1,600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் தங்கியிருந்தவர்களின்  400 அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஒரு இலட்சம் ரூபா இலங்கை நாணயத்தாள்கள் என்பனவும் களவாடப்பட்டுள்ளன. இலங்கை செய்திகள் சம்பவம் தொடர்பில் உரிமையாளர்களால் […]

புதுக்குடியிருப்பில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் (அ) பகுதி கணேஸ் திட்டத்திலுள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் புதையல் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றன. குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் இருப்பதாக கூறி கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் நீதிமன்றத்தின் அனுமதியைபெற்று ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகழ்வு பணியை ஆரம்பித்திருந்தனர். இருப்பின் ஊடகங்களுக்கான செய்தி சேகரித்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஊடகவியலாளருக்கு அப்பகுதி மக்களால் வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த அகழ்வுபணியின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டு […]

சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி இடமாற்றம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் (Negombo Prison) ஏற்பட்ட வன்முறை மோதலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் துப்பாக்கிச் சூடு நடத்திய சிறைச்சாலை அதிகாரி, பல்லேகலை சிறைச்சாலைக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிறைச்சாலைகளின் ஊடகப் பேச்சாளரும் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க இந்த இடமாற்றத்தை உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூலை 6ஆம் திகதி, சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தின் போது கைதிகள் குழுவொன்று சிறைச்சாலையின் இறுதி மரக் கதவை உடைத்துக் கொண்டு தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் நிலையில், இந்த அதிகாரி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். விசாரணைகளின்படி, […]