நீர்கொழும்பிலிருந்து பூஸா சிறைக்கு மாற்றப்பட்ட கைதி உயிரிழப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையை அடுத்து பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் உள்ள சிரேஷ்ட அதிகாரிகள் இன்று (08) விசேட கூட்டமொன்றிற்காக அழைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நீதி மற்றும் தேசிய […]

2 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த வலம்புரிச் சங்குகள் பறிமுதல்

வெளிநாட்டவர் ஒருவருக்கு ரூ. 2 கோடிக்கு விற்பனை செய்வதற்காக தயாராக இருந்த இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(07.07.2026) நண்பகல் கிண்ணியா – மாஞ்சோலை பகுதியிலிருந்து நிலாவெளி பகுதிக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருந்த நிலையிலேயே குறித்த வலம்புரிச் சங்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன. திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபரின் வசமிருந்த இரண்டு […]

அதிகரிக்கும் டெங்கு அபாயம்; அவசர எச்சரிக்கை

இலங்கையின் மேல் மாகாணத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய இடங்கள் அதிகளவில் காணப்படுகின்றன என டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு நேற்று(07.07.2026) விசேட கருத்துத் தெரிவித்த டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியமாகும் என வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மேல் மாகாணத்தில் கொசுப்புழுக்கள் பெருகக்கூடிய அபாயகரமான இடங்கள் அதிகளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனவே, […]

அதிகார துஷ்பிரயோகம்; ஊழல் வழக்கில் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து சட்டவிரோதமான முறையில் நட்டஈடு பெற்றுக்கொண்ட ஊழல் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குற்றப்பத்திரிகைகள், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் கையளிக்கப்பட்டன. குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் மூவரையும் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை […]

உலகெங்கிலும் அரங்கேறி வரும் மனித உரிமை மீறல்களுக்கு வருந்தும் ஐ.நா

உலகெங்கிலும் அரங்கேறி வரும் கொடூரங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு மத்தியில், மக்களைப் பாதுகாப்பதற்கான ஐ.நாவின் ‘பாதுகாக்கும் பொறுப்பு’ என்ற சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீண்டும் வலுவாக உயிர்ப்பிக்க வேண்டும் என ஐ. நாவின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் மார்ட்டின் கிரிஃபித்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக நியூயோர்க்கில் உள்ள ஐ. நா பொதுச் சபையில் அண்மையில் விவாதங்கள் நடைபெற்ற நிலையில், இந்த முக்கியக் கோட்பாடு எவ்வாறு அரசியல் காரணங்களால் முடக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அவர் […]