உறவை முறித்தது தி.மு.க.தான்! திருமாவளவனின் அதிரடிப் பேச்சு!

சென்னை: சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பேசிய வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க. கூட்டணியிலிருந்து வி.சி.க. விலகியது குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கூட்டணியில் வி.சி.க. இல்லை என்று தி.மு.க. தலைவரே அறிவித்ததாகக் கூறிய அவர், தான் ஒருபோதும் கூட்டணியை விட்டு வெளியேறுவதாகக் கூறவில்லை என்று தெரிவித்தார். முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனான தனது நட்பு தூய்மையானது என்றும், அவர் மீதுள்ள மதிப்பு குறையாது என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார். மேலும், தவெக அமைச்சரவையில் […]
ராஜ்மோகன், தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா? – சீமான் கேள்வி

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகப் பேசுவதற்கும், அரசுப் பள்ளிகளின் அவல நிலைக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும் தவெக அரசு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து, ஏழை மாணவர்கள் கல்வி பயிலும் அரசுப் பள்ளிகளைச் சீரமைப்பதே அமைச்சரின் கடமை என்றும் அவர் குறிப்பிட்டார். […]
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ரிட் மனுவை உயர்நீதிமன்றிற்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் கோரிக்கை; வழக்கு 9ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

தன்னை கைது செய்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை, உயர்நீதிமன்றத்திற்கு முன்வைக்குமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றிற்கு இன்று (06) திங்கட்கிழமை அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
சாவகச்சேரி உப தவிசாளர் பதவி நீக்கல் வழக்கில் இடைக்கால தடை வழங்க யாழ் மேல் நீதிமன்றம் மறுப்பு

சாவகச்சேரி உப – தவிசாளரை ஆளுநர் தனிநபர் விசாரணை குழுவின் விசாரணை தீர்மானத்திற்கு அமைய பதவி நீக்கியமை தொடர்பில் குறித்த உபத்தவிசாளர் அவர்களால் கலாநிதி குருபரன் ஊடாக அந்த தீர்மானத்தை இரத்து செய்யக் கூறியும் அந்த தீர்மானம் தொடர்பில் இடைக்கால தடை கட்டளை வழங்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரிய இடைக்கால தடை கட்டளையை வழங்க யாழ் நீதிமன்றம் இன்றைய தினம் (06.07.2026) மறுத்துள்ளது. கலாநிதி குருபரன் அவர்களின் நீண்ட வாதத்தை செவிமடுத்த மேல் நீதிமன்ற […]
சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (05) பிற்பகல் சிறைக்கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 33 பேர் காயமடைந்திருந்தனர். இன்று அதிகாலை நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று முற்பகல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 25 பேர் […]
அதிமுகவும், திமுகவும் ஒரே நாளில் ஆளுநரை சந்திப்பது அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்புகிறது – சிபிஎம் சண்முகம்

மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், ஆளுநர் ஆர்.வி. அர்லேகரின் செயல்பாடுகளை விமர்சித்துப் பேசியுள்ளார். ஆளுநர் அரசியல் சாசன வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் மாளிகையில் குறைகளைக் கேட்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் கூறினார். மேலும், குதிரை பேரம் குறித்துப் பேசிய அவர், எம்.எல்.ஏ.-க்கள் பதவி விலகி கட்சி மாறுவது ஜனநாயக விரோதமானது என்று குறிப்பிட்டார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒரே நாளில் ஆளுநரைச் சந்தித்ததைச் […]
சிறைச்சாலை மோதல்: உயிரிழப்பு 25 ஆக உயர்வு; 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (05) பிற்பகல் சிறைக்கைதிகளின் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 33 பேர் காயமடைந்திருந்தனர். இன்று அதிகாலை நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும், இன்று முற்பகல் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்த மோதலில் சிறைச்சாலை அதிகாரிகள் ஐவர் உட்பட மொத்தம் 25 பேர் […]
தற்போதைய அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளது

தற்போதைய அரசாங்கம் தொழில்முனைவோர் உட்பட தங்களை ஆட்சிக்குக் கொண்டு வந்த அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ‘தைரியமான மனிதர்களை உருவாக்குவோம் – தொழில்முனைவோருக்கு கைகொடுப்போம்’ என்ற தலைப்பில் நேற்று கோட்டேயில் நடைபெற்ற தொழில்முனைவோர் மற்றும் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த திலித் ஜயவீர, “இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்கள், இதன் மீது பெரும் நம்பிக்கை […]
நெய்மர் சர்வதேச கால்பந்தாட்டத்தில் இருந்து ஓய்வு

உலகப் புகழ்பெற்ற பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் (Neymar), சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் 2026 ஃபீஃபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் களம் கண்ட பிரேசில் அணி, நோர்வே அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பெரும் ஏமாற்றமடைந்த நெய்மர் […]
பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை குறைகிறதா?

எரிவாயு விலை குறைக்கப்பட்டாலும் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் லிட்ரோ மற்றும் லாஃவ்ஸ் நிறுவனங்கள் எரிவாயு விலைகளைக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, உணவகங்களில் விற்கப்படும் சில உணவுப் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன. எனினும், பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளைக் குறைக்கக் கூடிய சாத்தியங்கள் கிடையாது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எரிவாயு விலை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரைட் ரைஸ், கொத்து, பரோட்டா மற்றும் சிற்றுண்டிகளின் விலைகள் குறைக்கப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் […]