பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

தமது கடமைக்கான துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட யட்டியாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவுப் பொறுப்பதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி தனது கடமைக்காகப் பொறுப்பேற்ற கைத்துப்பாக்கி காணாமல்போனமை தொடர்பாக, நேற்று சீதாவக்கபுர கோட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார். கடந்த 26ஆம் திகதி குறித்த பொறுப்பதிகாரி கடமைக்காகச் செல்லும்போது கைத்துப்பாக்கியொன்றையும் 10 தோட்டாக்களையும் எடுத்துச் சென்றுள்ளதுடன், அவற்றை மீண்டும் ஒப்படைக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர் ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் […]

இறுதிக்கட்டத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரி விசாரணை…

உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நீண்டகாலம் சென்ற நிலையில் தற்போது அதன் இறுதி கட்டத்துக்கு வந்திருக்கிறோம். அதேபோன்று போதைப்பொருள் கடத்தல்கார்களின் பிரதான சூத்திரதாரிகள் யார் என குறிப்பிட்டளவானவர்களை இனம் கண்டிருக்கிறோம் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். ஹோமாக பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு குண்டு்த்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்க நாங்கள் […]

குற்றக் குழுவின் தலைவர்’லொக்கு பெட்டி’யின் பிரதான துப்பாக்கிதாரி சடலமாக மீட்பு!

இரு கைகளும் கால்களும் கொன்கிரீட் தூண் ஒன்றுடன் கட்டப்பட்ட நிலையில் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம், ‘லொக்கு பெட்டி’ என்றழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவனின் பிரதான துப்பாக்கிதாரியான ‘அல்மேதா’ என்பவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலம் கிங் கங்கையில் மிதந்து கொண்டிருந்த போது, கடந்த 23ஆம் திகதி இரவில் போத்தல பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது. சடலத்தின் தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததால் அதனை அடையாளம் காண முடியாமல் இருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட […]

2025 டித்வாபுயல் அழிவுகள்: சீரமைப்புப் பணிகளில் மேலும் தாமதம்?

சீரற்ற காலநிலை காரணமாக கடந்த 2025ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அழிவுகளை சீரமைக்கும் பணிகளை 2026ஆம் ஆண்டில் நிறைவு செய்ய முடியாது என 2027ஆம் ஆண்டுக்காக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள நிதி மூலோபாய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனர்த்தத்தினால் ஏற்பட்ட அழிவுகள் காரணமாக பாராளுமன்றத்தினால் 2026ஆம் ஆண்டுக்காக 500 பில்லியன் ரூபாய் மேலதிக நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், மீள் குடியேற்றத் திட்டத்தின் அளவு மற்றும் சிக்கல்தன்மை காரணமாக அந்த அனைத்துப் பணிகளையும் இந்த வருடத்திற்குள் நிறைவு […]