இஸ்ரேல் – லெபனான் இடையே முதற்கட்ட ஒப்பந்தம் கையெழுத்து

இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக வொஷிங்டனில் பல நாட்கள் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலும் லெபனானும் முதற்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும், இரு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை ஒரு ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே கருதுகின்றனர். லெபனான் தூதுவர் நடா மொவத் (Nada Moawad) மற்றும் இஸ்ரேலிய தூதுவர் யெஹியேல் லைட்டர் (Yechiel Leiter) ஆகியோர் வொஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையில் அமெரிக்காவுடன் இணைந்து இந்த முத்தரப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டனர், […]
அரசின் செயற்பாடுகள் ஐனநாயகத்திற்கான அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கின்றன – சித்தார்த்தன்

மிகக் கொடூரமான ஆட்சியில் கூட இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறவில்லை. கட்சிகளும் மக்களும் ஒன்றிணைந்து தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவிப்பதன் மூலம் தான் இத்தகைய ஜனநாயக விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்றுவெள்ளிக்கிழமை (25) சாவகச்சேரியில் கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டன. […]
எங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே – ஈரான்

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதை நோக்கியதாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அங்கு “மிகவும் வலுவான சோதனை மற்றும் கண்காணிப்பு முறையை” ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் குரோசி வலியுறுத்தியுள்ளார். டோக்கியோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஈரான் தங்களின் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வந்தாலும், வெறும் வார்த்தைகளை மட்டும் நம்பி சர்வதேச சமூகம் இருக்க முடியாது என்றும், அணுசக்தி தளங்களில் […]
வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 589 ஆக அதிகரிப்பு

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 589 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டு ஊடகங்களின் செய்திகளின்படி, சுமார் 2,980 பேர் காயமடைந்துள்ளதோடு, மேலும் நூற்றுக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. முன்னதாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிக்கைகளில் 235 பேர் உயிரிழந்ததாகவும், 4,300 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசுலாவில் தங்கியிருந்த மூன்று ஸ்பானிய பிரஜைகள் நிலநடுக்கத்தில் உயிரிழந்துள்ளதை அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளதுடன், மேலும் 99 […]
யாழ்.சர்வதேச விளையாட்டரங்கு திட்டத்தில் மாற்றம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிறைவேற்றுச் சபையினால் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கம் ஒன்றை நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டம் குறைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டம் தற்போதைய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிதி நிலைமைக்கு அப்பாற்பட்ட ஒன்று என கருதுவதால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட்ரங்கத் திட்டம் குறைக்கப்படவுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிலைமாறுதல் குழு செயலாளர் பிரகாஷ் ஷாஃப்டர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஹோட்டல்கள், வீட்டு வசதித் திட்டம், விளையாட்டுத் தொகுதி என பல்வேறு […]
மட்டு. வைத்தியசாலையில் குழந்தையைப் பிரசவித்த பெண் டெங்குவால் உயிரிழப்பு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், அண்மையில் பெண்குழந்தையை பெற்றெடுத்த நிலையில், நோய் நிலை ஏற்பட்டு, வியாழக்கிழமை (25) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் பதிவான முதலாவது டெங்கு மரணம் இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார். […]
மனித எச்சங்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென்றால் அது செம்மணி புதைகுழியாகவே இருக்கும் – செல்வம் அடைக்கலநாதன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளின் போது உதய கம்மன்பிலவின் செயற்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கும் இந்த தாக்குதலுக்கும் இடையில் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகங்கள் எழுகின்றன. உதய கம்மன்பிலவை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். காணாமல் போனோர் விடயத்தில் எமது ஆஜர் ராயப்பு ஜோசப் 146,644 பேர் காணாமல் போயுள்ளதாக கூறியிருந்தார். அவரின் வெளிப்படுத்தலே […]
அதிவேக நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் தொடர் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கலனிகம மற்றும் தொடங்கொட பகுதிகளுக்கு இடையிலுள்ள 31ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்ற 5 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்துள்ளன. மாத்தறை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் சிலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தையடுத்து சம்பவம் இடம்பெற்ற பகுதியில் கடும் […]
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் கைது
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை தயாரித்து மோசடி செய்த சந்தேகநபர் ஒருவர் வெள்ளிக்கிழமை (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். இது மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பானது. சந்தேக நபர் 41 வயதான ஜனாதிபதி செயலகம், பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவைப் பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் மற்றும் கண்டியை வசிப்பிடமாகக் கொண்டவர். சந்தேகநபர் இதற்கு […]