தைலாபுரத்தில் இன்று ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு: கட்டியணைத்து அழுத தந்தை ராமதாஸ்!

திண்டிவனம்: பாமக-வின் பிளவு மற்றும் ராமதாஸ் – அன்புமணி இடையேயான கருத்து வேறுபாடுகளால் கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் செயல்பாடுகள் முடங்கியிருந்தன. இந்தச் சூழலில், இன்று ராமதாஸ் – சரஸ்வதி அம்மையாரின் 61-வது திருமண நாளை முன்னிட்டு, சபரிமலை சென்று திரும்பிய அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் தைலாபுரம் தோட்டம் வந்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு தந்தையை நேரில் பார்த்த அன்புமணி, ராமதாஸ் காலில் விழுந்து வணங்க, அவரை அன்புமணி கட்டித்தழுவி ராமதாஸ் கண்ணீர் மல்க அழுத […]
36 கிலோ கிராம் (Hashish) -கனடா பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

சுமார் 35 கிலோ கிராமிற்கும் அதிக எடையுடைய கஞ்சா (Hashish) போதைப்பொருளை இலங்கைக்குள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் 18 வயதுடைய கனடா நாட்டுப் பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து இலங்கை சுங்கப் பிரிவின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட இந்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் 352 மில்லியன் ரூபாய்க்கும் (35.2 கோடி ரூபாய்) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக இலங்கையை வந்தடைந்த இப்பெண்ணின் பயணப் […]
பொலிசாருக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்!!

கடந்த 22. 06.2026 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் நிலைய முன்பாக பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பொழுது அதிவேகமாக மோட்டார் சைக்கிளினை செலுத்திய ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வீதி விபத்தில் பெருமாள் கணேசன் என்ற 64 வயதுடைய ஓய்வு பெற்ற அதிபர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இவரின் இறப்புக்கு நீதி பெற்றுத்தர வேண்டும் எனவும் கிளிநொச்சி பகுதியில் பல்வேறு விபத்துக்கள் மது மற்றும் போதைப்பொருள் பாவனையினால் இடம் பெறுவதாகவும், […]
கேப்பாபுலவு பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி தொடர் போராட்டத்தில் குதித்த மக்கள் ; ஆளுநரிடம் அவசர கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக இன்று (24) புதன்கிழமை காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மாற்றுக்காணிகளை தாம் ஏற்றுக் கொண்டதாக ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது எனவும் தாம் அப்படி எந்த மாற்றுக் காணிகளையும் ஏற்கப் போவதில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். வட மாகாண ஆளுநர் நேரில் வருகை தந்து மக்களின் உண்மை நிலையை வெளிக்கொண்டு […]
16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைத் தடை செய்ய இலங்கை நடவடிக்கை

சிறுவர்கள் சமூக ஊடகத் தளங்களை (Social media platforms) அணுகுவதைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தனிநபர் சட்டமூலம் (Private Member’s Bill) ஒன்றை, புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான (PC) பைசர் முஸ்தபா நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ‘சமூக ஊடக குறைந்தபட்ச வயதுச் சட்டமூலம்’ (Social Media Minimum Age Bill) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழியப்பட்ட சட்ட வரைபானது, 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகச் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்யக் கோருகிறது. […]
சட்டமன்றத்தை Shooting Spot ஆக மாற்றுவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல! – ஜெயக்குமார் ஆவேசப் பதிவு!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக-வை நையாண்டி செய்து பேசிய குட்டிக்கதை, எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியுற்றதை மறைமுகமாகச் சாடி முதலமைச்சர் பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்ததைச் சுட்டிக்காட்டிய ஜெயக்குமார், சட்டப்பேரவையை ஒரு படப்பிடிப்புத் தளமாக மாற்றுவது தமிழகத்திற்கு நல்லதல்ல என்று எச்சரித்துள்ளார். முதலமைச்சர் விஜய் தனது உரையில் பஞ்ச் டயலாக் பேசுவதையும், […]
பட்டியலின மக்களுக்கு மறுக்கப்பட்ட ஆலயப் பிரவேசம்; அதிரடி காட்டிய தமிழக அரசு!

கரூர் மாவட்டம்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் அருள்மிகு செல்லாண்டி அம்மன் கோயில்களில், மூன்று தலைமுறைகளாக பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. திருவிழாக் காலங்களில் கூட இவர்களுக்குக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இத்தகைய சமூக அநீதி குறித்து, அக்கிராம மக்கள் முதலமைச்சர் விஜய்க்கு புகார் அனுப்பியதன் அடிப்படையில், முதலமைச்சர் உடனடியாகக் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் […]
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்தி, மாகாண சபைகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாட்டின் உச்சக்கட்ட சட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதால் அது பாதுகாக்கப்பட வேண்டும். எனினும், அதனைப் பாதிக்கும் வகையில், சமகாலப் பட்டியலில் உள்ள சுற்றாடல் துறைக்கு மாகாண சபைக்கு இருக்கும் அதிகாரங்களில் தலையிடுவது பொருத்தமற்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) புதன்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதற்குத் தீர்வுகாணக்கூடிய விரைவான வழிமுறை, மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதாகும் என்றும், இதன் மூலம் ஓர் அரசியல் அதிகாரம் தெரிவுசெய்யப்பட்டு […]
இன்னும் நடிகராகவே செயல்படுகிறார் முதலமைச்சர் விஜய்! – சிவசங்கர் அதிரடிப் பேட்டி!

சென்னை: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் திமுக மீது முன்வைத்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர், அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது முதலமைச்சரை வன்மையாக விமர்சித்தார். முதலமைச்சர் இன்னமும் தேர்தல் மனநிலையிலேயே இருப்பதாகவும், சட்டப்பேரவையை ஒரு படப்பிடிப்புத் தளமாகவே கருதுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். முதலமைச்சர் கேமரா முன் வசனம் பேசிப் பழகியவர் என்பதால், அதையே இப்போதும் தொடர்கிறார் என்றும், குட்டிக்கதைகள் சொல்வதை முதலமைச்சர் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், முதலமைச்சர் […]
வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகள் -பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன்

வடக்கு மாகாணத்தில் ‘வெளிப்படுத்தல் உறுதி’ ஊடாக இடம்பெறும் மிகப் பெரிய காணி மோசடிகளைத் தடுக்கும் வகையில், நொத்தாரிசு சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத்திருத்தங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்டவரைஞர் திணைக்களங்களுடன் விரைவில் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன் அவர்கள் உறுதியளித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், பதிவாளர் நாயகத்துடனான உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (24.06.2026) புதன்கிழமை காலை […]