காணாமல்போனோரின் பிரச்சினைக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு

காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் பங்கேற்புடன், யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து […]

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி காலமானார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராசா ஜெயானந்தமூர்த்தி, தனது 61ஆவது வயதில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை (21) பிற்பகல் உயிரிழந்ததாக குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. மட்டக்களப்பு அரசியல் மற்றும் சமூக துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய ஜெயானந்தமூர்த்தியின் மறைவு, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் […]

லெபனானில் செயல்படும் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்த வேண்டும் – டிரம்ப் எச்சரிக்கை

லெபனானில் பிரச்சனைகளை ஏற்படுத்த நிதியளித்து செயல்படும் ஆயுதக் குழுக்களின் நடவடிக்கைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகக் கணக்கில் ஒரு சிறப்புப் பதிவில், தெஹ்ரான் ஆட்சி உடனடியாகச் செயல்பட்டு இந்தக் குழுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். “லெபனானில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதிலிருந்து, அதிக ஊதியம் பெறும் தங்களின் பினாமி குழுக்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று ஜனாதிபதி கூறியுள்ளார். […]