செம்மணி மனித புதைகுழியிலிருந்து மீட்ட என்புத் தொகுதிகள் இன்னமும் பரிசோதனைக்கு அனுப்பப்படவில்லை – எம்.ஏ.சுமந்திரன்

செம்மணி மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள், நிபுணத்துவம் வாய்ந்த பிரபலமான பல்கலைக்கழகங்களுக்கு அல்லது பரிசோதனைக்கூடங்களுக்கு அனுப்பப்பட வேண்டும் எனக் கூறி ஒரு வருடமாகின்ற போதும் அவை இன்னமும் அனுப்பப்படவில்லை. அகழ்ந்தெடுக்கப்படும் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, இதற்குக் காரணமானவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். செம்மணி மனித புதைகுழி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். […]

டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்த சகலர் பங்களிப்பும் முக்கியம்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால், அந்த நிலைமையைத் தாங்குவதற்கு வைத்தியசாலை கட்டமைப்புக்கு கடினமாகிவிடும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களினதும் நிறுவனங்களினதும் பொறுப்பு மிகவும் முக்கியமானது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வீடுகள், அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய இடங்களை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்க வேண்டும் எனவும், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் சுகாதாரக் கட்டமைப்புக்கு கடுமையான அழுத்தம் ஏற்படக்கூடும் […]

வழமைக்கு திரும்பும் ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய் விநியோகம்

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைப் பாதித்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட சில மணி நேரங்களிலேயே 12.5 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் ஹோர்முஸ் சந்தி ஊடாக கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் வௌ்ளை மாளிகையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இதனை குறிப்பிட்டார். முன்னதாக 6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை தாங்கிய சவூதி அரேபியக் கொடியுடன் கூடிய மூன்று […]

சுகீஸ்வர பண்டார விளக்கமறியலில்

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைவாக, இன்று (18) காலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் ஊழல் […]

Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு வழங்கும் Legends & Icons Awards 2026!

உலகெங்கும் பரந்துவாழும் எமது ஈழத்தமிழ்ச் சமூகத்தை சேர்ந்த மருத்துவத்துறை, சட்டத்துறை, கற்பித்தற்துறை, கலைத்துறை, பாதுகாப்புத்துறை, தொழில் முனைவோர்… எனப் பரந்து பட்ட தனித்துவமிக்கவர்களாகத் திகழும் முக்கியஸ்தர்களைக் கௌரவிக்கும் Legends & Icons Awards 2026 என்ற ஒரு பிரம்மாண்ட நிகழ்வினை Behind me சர்வதேச ஊடக வலையமைப்பு கனடாவில் எதிர்வரும் ஜுன் 20ஆம் திகதி சனிக்கிழமை Brighton Convention Center 2155 MCNICOLL AVE, TORONTO, ON M1V 5P1 இல் மாலை 6.30 மணிக்கு நடாத்தவுள்ளது. […]