இலங்கை முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்துக்கு எதிராக சிங்கள ராவய தேசிய அமைப்பு முறைப்பாடு

இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையில் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தை உடனடியாக இரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தில் முறைப்பாடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. சிங்கள ராவய தேசிய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தலைமையிலான குழுவினர், குறித்த கோரிக்கையை முன்வைத்து இந்த முறைப்பாட்டை கையளித்துள்ளது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டமானது, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பான […]
ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் வெளிவருவது போல் தெரிகிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர், விழித்து வருவது போல் தெரிகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த உண்மை மூன்று ஜனாதிபதிகளின் ஆட்சியில் மறைக்கப்பட்டிருந்தன. மைத்திரி, கோத்தா, ரணில் ஆகிய ஜனாதிபதிகளின் ஆட்சியில் இந்த உண்மை வெளியில் வரவில்லை. அதனைக் கண்டறிவதற்கான தேடலும் முறையாக நடைபெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மைத்திரியின் அறியாமை, […]
‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கலைக்கு விழுந்த விலங்கு’; இன்று கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

அரச பயங்கரவாதத்தால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டுள்ள எமது தாயகக் கலைஞன் சங்கீதனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி கிளிநொச்சி மண்ணில் இன்றுமாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. போராட்ட விபரங்கள்: இடம்:பழைய கச்சேரி முன்பாக, A9 வீதி, கிளிநொச்சி திகதி: 2026 / 06 / 06 (சனிக்கிழமை) நேரம்: காலை 09.30 மணி ஏற்பாடு: கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம்