பிராம்ப்டனைச் சேர்ந்த 13 வயது சிறுமியைக் காணவில்லை

பிராம்ப்டனைச் சேர்ந்த (Brampton) காணாமல் போன 13 வயது சிறுமியைத் தேடுவதில், 21-வது பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் (21 Division Criminal Investigation Bureau) விசாரணை அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். அலிசியா (Allyssia) கடைசியாக ஜூன் 2, செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணியளவில், ஏர்போர்ட் ரோடு (Airport Road) மற்றும் கன்ட்ரிசைட் டிரைவ் (Countryside Drive) பகுதிக்கு அருகில் காணப்பட்டார். அலிசியா 5 அடி 4 அங்குல உயரமும், நடுத்தர உடல்வாகுகும், பொன்னிற முடியும் […]
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது
கடந்த மே மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 44 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது எட்டு டிங்கி படகுகள், இரண்டு கேனோ படகுகள் மற்றும் ஏழு டிரக்டர்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. திருகோணமலை பனிச்சங்கேணி, சோபா தீவு, பொல்மல்குடா, கிண்ணியா, சூடைக்குடா, ஓட்டமாவடி, அளம்பில், புதுமாத்தளன் மற்றும் யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கியதாக, கிழக்கு […]
அதிபர் சேவைக்கான போட்டிப் பரீட்சை

2025ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்குப் மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 7ஆம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதிப் பத்திரங்களை தங்களது திணைக்கள இணையத்தளத்தின் ஊடாக ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் இப்பரீட்சை ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் அதனைத் திகதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற்படையில் அமெரிக்க போர்க் கப்பல்

அமெரிக்காவினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட எல்.என்.எஸ் சமுத்ரவிஜய போர்க் கப்பல் இலங்கை கடற்படை சேவையில் நேற்று (4) இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்று இடம்பெற்றது. ஒரு கப்பலை நாட்டிற்குக் கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படைக் குழுவானது இதுவரை மேற்கொண்ட மிக நீண்ட பயணமாகவும், பனாமா கால்வாயினூடாக இலங்கைக் கடற்படை மேற்கொண்ட முதலாவது பயணமாகவும் இது அமைந்திருந்தது. மேரிலாந்தின் பல்டிமோரிலிருந்து மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க 12,000 கடல் மைல் தூரம் கொண்ட […]
கனடாவில் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம்; நம்பிக்கைக்காக – வாழ்க்கைக்காக நடப்போம்! உயிர்களைக் காப்போம்!

ரு நோயை எதிர்த்து போராடுவது மருத்துவர்களின் கடமை மட்டும் அல்ல… அது ஒவ்வொரு மனிதனின் மனிதநேயப் பொறுப்பும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் அளிக்கும் ஒரு மனிதநேய நடைபவனி – “புற்றுநோய் விழிப்புணர்வு நடைபவனி 2026” ஒவ்வொரு அடியும் ஒரு உயிருக்கு நம்பிக்கை… ஒவ்வொரு பங்கேற்பும் ஒரு குடும்பத்திற்கு துணை… ஒன்றாக நடந்தால் மாற்றத்தை உருவாக்கலாம். Behind Me Media, JMFOA Canada மற்றும் Behind Me Foundation இணைந்து நடத்தும் […]
தனது இயலாமையை மறைக்கவே அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முயல்கின்றது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொடர்புபடுத்தி அவரை கைது செய்வதற்கான நாடகமொன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறது. அரசாங்கம் தமது இயலாமையை மறைக்கவும், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைச் சரியாகக் கையாள முடியாமலும், ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கவும் மேற்கொள்ளும் திட்டமிட்ட நாடகங்களாகும் என கோட்டாபயவின் முன்னாள் செயலாளர் சுகீஸ்வர பண்டார சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடை மற்றும் தற்போதைய அரசியல் சூழலில் அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டமிட்ட […]
பௌத்த பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது – பாட்டலி சம்பிக்க ரணவக்க

பல்லேகம ஹேமரத்ன தேரரின் விவகாரத்தை தொடர்ந்து பௌத்த பிக்குகள் மற்றும் புத்தசாசனத்தை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படும் விமர்சனங்களால் பிக்குகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புத்தசாசனத்தை அவமதிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, புத்தசாசனத்தையும், பிக்குகளையும் அவமதிக்கும் […]
தற்போதைய நிதிக் கொள்கை குறித்து பயிற்சி
தற்போதைய நிதிக் கொள்கை மற்றும் அது சார்ந்த விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெளிவுபடுத்தும் வேலைத்திட்டமொன்றை இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்துள்ளது. தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த விடுத்த கோரிக்கைக்கு அமையவே இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட மத்திய வங்கி அதிகாரிகளின் பங்கேற்புடன் இந்த வேலைத்திட்டம் இம்மாதம் 10ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக, கடந்த முதலாம் திகதி கூடிய, பாராளுமன்ற […]
நேற்று தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் பதிவு செய்யப்படவில்லை

அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் தீ விபத்துக்குள்ளான முதியோர் இல்லம் எந்தவொரு அரச நிறுவனத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை என்பதை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே உறுதிப்படுத்தியுள்ளார். “அத தெரண” மேற்கொண்ட தேடலின் போதே, அமைச்சர் இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார். அங்குருவாதொட்ட, படகொட பகுதியில் அமைந்துள்ள இந்த முதியோர் இல்லம், சமூக ஊடகங்கள் மூலம் மிகவும் பிரபலமான ஒரு இடமாகும். அங்கு தங்கியுள்ளவர்கள் மற்றும் வழங்கப்படும் சேவைகள் குறித்து தொடர்ச்சியாக […]
வடக்கு ஆளுநர் – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது, ஆசிரியர்களின் இடமாற்றங்கள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கல்வித்துறையை மேலும் மேம்படுத்துவதற்கான பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன. இந்தக் கலந்துரையாடலில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அதன் ஆலோசகர், தலைவர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.