வட்டுவாகல் பழைய பாலத்தின் ஒரு பகுதி தமிழின அழிப்பின் நினைவுச் சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

முல்லைத்தீவு – வட்டுவாகல் பழையபாலத்தின் ஒரு பகுதியாவது தமிழ் இன அழிப்பின் நினைவுச்சின்னமாகப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கினைப்புக்குழுக்கூட்டம் 03.06.2026இன்று இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றபோது, பழைய வட்டுவாகல் பாலத்தின் ஒருபகுதி நினைவுச்சின்னமாக பேணிப் பாதுகாக்கப்படவேண்டுமெனக் கோரியிருந்தோம். குறிப்பாக எரித்து அழிக்கப்பட்ட […]
யாழ். பல்கலைக்கழக வெசாக் கூடு சேதமாக்கல்: வதந்திகளை நம்ப வேண்டாம் என பீடாதிபதி வேண்டுகோள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்திற்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்களே வெசாக் கூட்டினைச் சேதப்படுத்தியுள்ளனர் என்றும், இது குறித்து பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளையும் விசமப் பிரசாரங்களையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மே மாதம் 30, 31 ஆம் திகதிகளில் பௌத்த மாணவர்களால் வெசாக் நிகழ்வுகளை நடத்துவதற்கு முறையாக அனுமதி கோரப்பட்டிருந்தது. சகல மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் […]
முல்லை மத்திய பேருந்துநிலையத்தின் நிர்மாணப்பணிகளை விரைந்து முழுமைப்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

நீண்டகாலமாக முழுமைப்படுத்தப்படாமல் காணப்படும் முல்லைத்தீவு பேருந்து மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகளை விரைவாக முழுமைப்படுத்தி, மக்கள் பாவனைக்காக கையளிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் குறித்த முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதியுடன் முழுமைப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 03.06 2026இன்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இவ்விடயம்தொடர்பில் நாடாளுமன்ற […]
காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சல்லேவுக்கு PTSD, மனச்சோர்வு, பதற்றம் -மருத்துவ அறிக்கைகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) தற்போது காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, மனச்சோர்வு (depression), பதற்றம் (anxiety) மற்றும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறால் (PTSD) பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது சட்டத்தரணி இன்று கொழும்பு கோட்டை நீதவான் பசான் அமரசேனவிடம் தெரிவித்தார். இந்தக் குறைபாடுகள் மருத்துவ அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் […]
யாழ்.பல்கலைக்கழகத்திலற்குள் மதிலேறி பாய்ந்து வந்தவர்களே வெசாக் கூட்டினை சேதப்படுத்தினர்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட வெசாக் அலங்காரத்தை இனந்தெரியாதவர்கள் சேதப்படுத்தியிருந்தனர். இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடாதிபதி பேராசிரியர் என். கெங்காதரன் கருத்து தெரிவிக்கையில் கடந்த 31 ஆம் திகதி இரவு வரை நிகழ்வுகள் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த பின்னர் பின்னிரவு 10:50 மணியளவில் முகங்களைத் துணியால் மூடியபடி மதில் வழியாகப் பாய்ந்து உள்நுழைந்த இனந்தெரியாத இரண்டு பேர் பீடத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் அலங்காரத்தை அடித்து சேதப்படுத்துவதை அவதானித்த கடமையிலிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அவர்களை நோக்கிச் […]
2028க்குள் நாடளாவிய ரீதியில் ஆயிரம் ஆரம்ப சுகாதார நல்வாழ்வு மையங்களை நிறுவத் திட்டம்!

ஒரு உயர்தர ஆரம்ப சுகாதார சேவை விரைவில் நாட்டு மக்களுக்கு எளிதில் அணுகக்கூடிய ஒரு முதன்மை சுகாதார சேவையாக விரிவுபடுத்தபட உள்ளது. ஏற்கனவே 41 சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன, இந்த ஆண்டுக்குள் 300 மையங்களை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப கட்டத்தில் ஆயிரம் மையங்கள் நிறுவப்படஉள்ளன, 2027-ல் 450 மையங்களும், 2028-ல் 250 மையங்களும் நிறுவப்படும். ஆரம்ப சுகாதார சேவை தேவைப்படும் மக்களுக்கு சுகாதார மேம்பாடு, நோய் தடுப்பு, நோய் சிகிச்சை, மறுவாழ்வு மற்றும் மருந்துகளை […]
ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து: 22 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று (03) புதன்கிழமை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, அங்கு பணிபுரிந்த சுமார் 22 பெண் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். எம்பிலிபிட்டிய – நோனாகம வீதியில், சுதுபாலம பகுதிக்கு அருகில் அமைந்துள்ள ஆடைத்தொழிற்சாலையின் களஞ்சிய அறை ஒன்றிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவியதால் தீக்காயங்களுக்கு உள்ளான மற்றும் அங்கிருந்து வெளியேறிய நச்சுப் புகையை சுவாசித்ததால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியர்களே இவ்வாறு எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் […]
கொழும்பில் உள்ள பொது மயானத்தில் இருந்து துப்பாக்கி மீட்பு

இலங்கையிலேயே முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘மினி உசி’ ரக தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள், கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட ‘மஹவத்தே சாமர’ என்ற குற்றவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சமீபத்தில் டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட மஹவத்தே சாமர என்ற குற்றவாளி, தற்போது பொலிஸ் […]
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
மே மாதத்தில் மட்டும் 145,745 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 132,919 சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும்போது 9.65% வளர்ச்சியாகும். மேலும், 2018 ஆம் ஆண்டு மே மாதத்தில் பதிவான 129,466 வருகையுடன் ஒப்பிடுகையில் இது 12.6% வளர்ச்சியாகப் பதிவாகியுள்ளது. புதிய புள்ளிவிவரங்களின்படி, மே மாதத்தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை […]
அமெரிக்க போர் விமானத்தால் ஈரான் ரேடார் தகர்ப்பு!

அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியதற்கு பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள், தொலை தொடர்பு கோபுரங்களை அமெரிக்கப் படை தகர்த்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் எம்க்யூ-1 ரக ட்ரோன் சர்வதேச கடல் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டது. இதை ஈரான் சில நாட்களுக்கு முன்பு சுட்டு வீழ்த்தியது. ஈரான் வான் எல்லைக்குள் நுழைந்ததால் சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறியது. இதற்கு பதிலடியாக ஈரானின் கோருக் மற்றும் கேஷ்ம் தீவு பகுதியில் உள்ள […]