இரண்டு நாட்களில் வாகன விபத்துக்களால் 24 பேர் பலி

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர, “கடந்த […]

இலங்கைமத்திய வங்கி பிணைமுறி வழக்கு: மேல் நீதிமன்றத்தின் உத்தரவை நிராகரித்த உயர் நீதிமன்றம்

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி வழங்கலின் போது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளை அந்தப் பிரதிவாதிகளுக்கு எதிராகத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது என […]

சிறுமி துஷ்பிரயோக வழக்கில் சந்தேகநபர் மெளலவி? – அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை விளக்கம்

இறக்காமம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் மெளலவியல்ல என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு உலமா சபை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இறக்காமம் பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சமூக ஊடகங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளில் அவர் “மௌலவி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை தவறானதாகும். குறித்த சந்தேக […]

துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்கள் கட்டாயமாக சான்றிதழ் பெற வேண்டும் – பொலிஸ்

தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்கள் தங்களது துப்பாக்கிகளின் செயல்பாட்டுத்திறன் மற்றும் விபரங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான அனுமதிப்பத்திர புதுப்பித்தலுக்கு இணங்க, அனுமதிப்பத்திரத்தைப் பெற்று அரை வருடம் (ஆறு மாதங்கள்) பூர்த்தியாகும்போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துகு துப்பாக்கியைச் சமர்ப்பித்து, துப்பாக்கியின் செயல்திறன் மற்றும் அதன் இலக்கம் ஆகியவை அனுமதிப்பத்திர இலக்கத்துடன் ஒத்துப்போகிறதா என்பதை ஆராய்ந்து, அதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு சபையால் அனைத்து தனிப்பட்ட பாதுகாப்பு துப்பாக்கி அனுமதிப்பத்திரதாரர்களுக்கும் […]