எதிர்காலத்தில் குடும்ப சுகாதார உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்!

எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 275 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் இன்று (26) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கொழும்பு இலங்கை தேசிய வைத்தியசாலையின் புதிய […]
வானிலை முன்னறிவிப்பு
தென்மேற்கு பருவக்காற்று நாடு முழுவதும் நிலைபெற்றுள்ளதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் […]
மட்டு. குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மட்டக்களப்பு, குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (26) களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜுன் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அமைந்துள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் ஸ்கன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்றின் உத்தரவிற்கு அமைவாக, பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இந்தப் புதைகுழிப் பகுதியில் நவீன தொழில்நுட்பமான ‘ஆடியோ ஃப்ரீக்வன்சி மேக்னடோ டெல்லூரிக்’ […]
மருத்துவ மையத்தில் பாலியல் வன்கொடுமை – மசாஜ் தெரபிஸ்ட் மீது வழக்கு

பிராம்ப்டனைச் சேர்ந்த மசாஜ் தெரபிஸ்ட் ஒருவர், வான் நகரில் உள்ள ஒரு மருத்துவ மையத்தில் வாடிக்கையாளரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, யார்க் பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி கைது: மே 11 அன்று, பிராம்ப்டனைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்: மே 9 அன்று, ரதர்ஃபோர்ட் சாலை மற்றும் வெல்லூர் வூட்ஸ் பவுலேவர்டு (Rutherford […]
தேரரால் சிறுமி துஷ்பிரயோகத்தில் அரசாங்கமும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் மௌனமும் கண்டிக்கத்தக்கது – கீதிகா தர்மசிங்ஹ

நுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்கு பல்லேகம ஹேமரத்ன தேரரின் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக விவகாரம் மற்றும் அந்தச் சம்பவத்தின் போது அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், அரசாங்கத்தின் பெண் பாராளுமன்ற அமைச்சர்களும் கடைப்பிடிக்கும் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என ஜனபலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் கீதிகா தர்மசிங்ஹ கண்டனங்களை வெளியிட்டுள்ளார். ஜனபலய அமைப்பினால் பொரளை என்.எம். பெரேரா கேந்திர மத்திய நிலையத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (26) நடைபெற்றது. இந்த சந்திப்பில் […]
பேராதனை பல்கலை மாணவர்களின் பேரணி

பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் மாணவர் நலவசதிகள் தொடர்பாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, பேராதனை பல்கலைக்கழக மகா மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (26) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை (26) பிற்பகல் ஆரம்பமான இந்த போராட்ட பேரணியால், பேராதனையிலிருந்து கம்பளை நோக்கிச் செல்லும் வீதியின் ஒரு வழிப் போக்குவரத்து தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் […]
இன்னுமொரு கப்பல் தரமற்ற நிலக்கரியுடன் கொழும்பு துறைமுகம் வந்துள்ளது – ‘சுதந்திர வழக்கறிஞர்கள்’

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தரமற்ற நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக ‘சுதந்திர வழக்கறிஞர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் ‘சுதந்திர வழக்கறிஞர்கள்’அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள், குறித்த நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் ‘ரிச்சர்ட்ஸ் பே கோல் […]