தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது – திலித் ஜயவீர

தற்போதைய தருணத்திலேனும் நாட்டைப் பொறுப்பேற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டம் தம்மிடம் உள்ளதாகவும் ‘சர்வஜன அதிகாரத்தின்’ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருடன் நடத்திய விசேட சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இந்த விசேட சந்திப்பு, மெல்பர்னில் உள்ள ‘Acacia Campus Theatre’ மண்டபத்தில் நடைபெற்றது. ‘சர்வஜன அதிகாரம்’ மற்றும் மெல்பர்ன் சகோதரத்துவம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த […]
கிளிநொச்சி – முட்கொம்பன் பகுதியில் கால்நடைகளை கடத்தியவர் கைது

கிளிநொச்சி அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் இருந்து லொறி ஒன்றின் மூலம் அனுமதி பத்திரமின்றி 22 கால்நடைகளை கொண்டு செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைவாக முகமாலை பகுதியில் உள்ள வீதி சோதனை சாவடியில் வைத்து நேற்று குறித்த லொறி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 22 கால்நடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவரை […]
ஆசிரியப் போட்டிப் பரீட்சை நிறைவு
நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) நேற்று (24) நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் […]
களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க சென்றவரைக் காணவில்லை
களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார். இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது. இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் இடம்பெற்ற நிலையில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த […]
தெற்கு லெபனான் மக்களை உடனடியாக வௌியேற இஸ்ரேல் உத்தரவு

தெற்கு லெபனானில் உள்ள சுமார் ஆறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவத்தின் ஊடகப்பேச்சாளர் அவிச்சாய் அத்ராயி உத்தரவிட்டுள்ளார். ‘X’ தளத்தில் அரபு மொழியில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அத்ராயி, பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறுமாறும், அந்த கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து திறந்தவெளிகளை நோக்கி குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு அப்பால் விலகியிருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இன்று பிறப்பிக்கப்பட்ட இது போன்ற இரண்டாவது […]
மிசிசாகாவில் கத்திக்குத்துச் சம்பவம்; வாலிபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

கனடாவின் மிசிசாகா நகரின் போர்ட் கிரெடிட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் வீடொன்றில் ஏற்பட்ட மோதலில், 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். போர்ட் கிரெடிட்டில் உள்ள ‘லேக்ஷோர் வீதி வெஸ்ட்’ (Lakeshore Road West) சந்திப்பிற்கு அருகில் அமைந்துள்ள ‘பைன் அவென்யூ நோர்த்’ (Pine Avenue North) பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. […]
ரொறன்ரோவில் வர்த்தக நிறுவனமொன்றில் திடீர் மின் கசிவுத் தீ விபத்து; புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

னடாவின் ரொறன்ரோ நகரின் மேற்குப் பகுதியில் (Toronto’s west end) அமைந்துள்ள வர்த்தக நிறுவனமொன்றில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கிப் பாதிப்படைந்த இருவர் அவசர சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவின் யோர்க் (York) பிராந்தியத்தில் உள்ள ‘எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்’ (Eglinton Avenue West) மற்றும் ‘டஃப்ரின் வீதி’ (Dufferin Street) சந்திப்பிற்கு அருகிலுள்ள வணிகக் கட்டிடமொன்றிலேயே இத் தீ விபத்து சம்பவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00 மணியைக் கடந்த […]
கனடாவில் சோகம்: காணாமற் போன குழந்தையின் உடல் எச்சங்கள் மீட்பு; இருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு!

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் (Halifax) நகரில் இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தீவிர தேடுதல் நடவடிக்கையின் பின்னர், மாயமாகியிருந்த புதுப்பிறந்த குழந்தையின் உடல் எச்சங்கள் (Remains) காப்புக்காட்டுப் பகுதியொன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக இருவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹாலிஃபாக்ஸ் பிராந்தியப் பொலிஸாரின் விபரங்களின்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில் ‘ஓல்ட் கோச் வீதிக்கு’ (Old Coach Road) அப்பால் உள்ள ஒரு அடர்ந்த காப்புக்காட்டுப் பகுதியில் (Wooded area) இருந்து இக் குழந்தையின் […]
பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக் கொண்டதில் அரசாங்கத்திற்கு பல இலட்சத்திற்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோப் குழுவில் தெரியவந்துள்ளது. தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு உரித்தான இந்த கட்டடத்தின் 65 எண் கட்டடம் 1999 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு பெற்று கொள்ளப்பட்டுள்ளது. அன்று ஒரு மாதத்துக்கான கட்டணமாக 3000 ரூபாவே அறவிடப்பட்டுள்ளது. குறித்த கார்ல்டன் பாலர் பாடசாலை இலாப நோக்கமற்று […]
ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சந்தேகநபர் ஜூன் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை நேற்று (24) ஹட்டன் மாவட்ட நீதிபதியும் நீதவானுமான பீற்றர் போல் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். விசாரணைகளின் பின்னர் பின்னர் ஜூன் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 47 வயதுடைய சந்தேகநபர் ஹாலிஎல, தெமோதரை […]