குறைந்த அழுத்தம் நீடித்து வருவதால் அவ்வப்போது மழை

நாட்டிற்கு வடகிழக்கே நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தம் நீடித்து வருவதால் அதன் நடத்தை, வளர்ச்சி மற்றும் அதன் பாதை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது. இதனால் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுவதுடன் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையான ஓரளவு பலத்த மழை பெய்ய […]

பௌத்த பிக்குவால் சிறுமி துஷ்பிரயோக வழக்கு: சந்தேகநபரான தேரருக்காக 20 சட்டத்தரணிகள்!

சிறுமி ஒருவரை தாகாத நடத்தைக்கு உட்படுத்திய அநுராதபுர பிரதான விகாரையின் தலைமை விகாராதிபதிக்கு எதிரான வழக்கு நேற்று (15.05.2026) அநுராதபுரம் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த பௌத்த பிக்கு முன்னிலையாகாத நிலையில் வழக்கு விசாரணைகள் நடைபெற்றன. சந்தேகநபரான பல்லேகம ஹேமரத்தன பிக்கு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ, சிரேஷ்ட சட்டத்தரணி ரஞ்சித் ராஜகருணா உள்ளிட்ட 20 சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் சார்பில் சட்டத்தரணி பிரதீப் திஸாநாயக்க முன்னிலையானார். ஆனால் தகாத நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் […]

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் உடலுக்கு பெட்ரோலை ஊற்றிக்கொண்ட நபர் கைது

எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று ஹோமாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் எரிபொருள் நிரப்ப வந்த நபர் ஒருவர், திடீரென தனது மோட்டார் சைக்கிள் மீதும், தனது உடல் மற்றும் தலை மீதும் பெட்ரோலை ஊற்றிக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் தத்ரூபமாகப் பதிவாகியுள்ளது. அந்த நபர் தன்னைத்தானே தீயிட்டு தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றிருக்கலாம் எனப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர் பெட்ரோலை ஊற்றிக்கொண்டதைக் கண்ட எரிபொருள் நிலைய […]

இரு இளைஞர்கள் நீரில் மூழ்கிப் பலி

கொஸ்கம, தாவல்கொட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு இளைஞர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களும் கொஸ்கம, சாலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. சடலங்கள் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

தாயிடமிருந்து சேய்க்குப் பரவும் எச்.ஐ.வி, சிபிலிஸ், ஹெபடைடிஸ் பி நோய்கள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டம்

யிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி, சிபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி ஆகிய மூன்று நோய்களும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் “3 வகை நோய்கள் ஒழிப்பு” தேசிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டம் மற்றும் அதன் இலக்குகள் குறித்துப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (15) கொழும்பு ரமடா ஹோட்டலில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் வைத்திய […]

முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனை

ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதக் கூட்டம் ஒன்றின் உறுப்பினராகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகக் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவின் சகோதரர் ஜகத் சமந்தவுக்கு ஐந்தரை வருடங்கள் கடுளீய சிறைத்தண்டனை விதித்து சிலாபம் மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (15) தீர்ப்பளித்தது. கடந்த 2007 நவம்பர் 24 ஆம் திகதி கருக்குளிய ஜயதிஸாராமய விகாரையில் நடந்த வைபவம் ஒன்றின் போது, ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் தனசிங்க சூரசிங்கவின் கடமைகளுக்கு இடையூறு […]