ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கபில சந்திரசேனவின் மரணம்: இன்று பிரேத பரிசோதனை

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று (09) நடைபெறவுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த கோட்டை நீதவான் பசான் அமரசேன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரால் நியமிக்கப்படும் 5 பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழுவின் மூலம் பிரேத பரிசோதனையை முன்னெடுத்து, அது குறித்த அறிக்கையை எதிர்வரும் 12ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். […]

இன்று மின்சாரக் கட்டண திருத்தம் அறிவிப்பு

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டண திருத்தம் இன்று (09) அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்குரிய மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக, திருத்தப்பட்ட மின் உற்பத்திச் செலவு மதிப்பீட்டை ‘நெஷனல் சிஸ்டம் ஓப்பரேட்டர்’ (National System Operator) நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அண்மையில் சமர்ப்பித்திருந்தது. எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திக்கான செலவு உயர்ந்துள்ளமையே, இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு கோரிக்கைக்குக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான […]

போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது!

தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் குஷ் ரக போதைப்பொருளை, நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் புறக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும், அவர் தனியார் நிறுவனமொன்றின் நிதி முகாமையாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து வருகை தந்த தாய் எயார் ஏசியா (FD-140) விமானம் மூலம் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு 10.15 மணிக்கு இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். […]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் கபில சந்திரசேனவின் மரணம்; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அவசியம் – சீலரத்ன தேரர்

முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அண்மைக்காலமாக சிறைச்சாலைகளிலும் நிதித்துறையிலும் உயர்மட்ட பதவிகளில் இருந்தவர்களின் திடீர் மரணங்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வலியுறுத்தினார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஜனசெத பெரமுன கட்சியின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் […]

யாழ் – நாகப்பட்டினம் கப்பல் பழுதானதால் பயணிகள் பெரும் அவதி

காங்கேசன்துறையிலிருந்து நாகப்பட்டினம் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை (8) புறப்பட்ட பயணிகள் கப்பல் நடுக்கடலில் பழுதடைந்ததால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்ட கப்பல், இரவு 11 மணியளவிலேயே நாகப்பட்டினத்தை சென்றடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், நடுக்கடலில் பழுதடைந்த பயணிகள் கப்பலை மீன்பிடி படகுகள் இழுத்துச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தீவிர அரசியலுக்கு ரணிலைக் கொண்டு வருவோம் – ஹரின் பெர்னாண்டோ

முன்னாள் ஜனாதிபதி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை வரும் ஜூன் மாதம் முதலாம் அல்லது இரண்டாம் வாரத்தில் மீண்டும் தீவிர அரசியலுக்குக் கொண்டு வரவுள்ளோம். அதன் பின்னர் நாட்டின் அரசியல் களத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். மேலும் உலகளவில் வலதுசாரிக் கொள்கை அல்லது மத்தியஸ்தப் பாதையில் பயணிப்பதற்கு ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே இலங்கையிலுள்ள மிகச் சிறந்த […]

த.வெ.க ஆட்சி அமைப்பதில் மீண்டும் சிக்கல்; 3வது முறையாகவும் ஆளுனரைச் சந்தித்தார் விஜய்!

இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் அர்லேகரிடம் தவெக தலைவர் விஜய் வழங்கினார். எனினும், பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், முதலில் 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. 2 தொகுதிகளில் […]

யாழ் போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் பாரிய தீ விபத்து

யாழ்ப்பாண வைத்தியசாலையின் மருந்து களஞ்சியபகுதியில் பாரிய தீ விபத்து பல கோடி பெறுமதியான மருந்துகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உறுதியாக தெரியாத நிலையில் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகிறது.

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மழையால் பாதிப்பு; பணிகளை தற்காலிகமாக நிறுத்த யோசனை?

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை (8) பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்டன. நல்லூர் பிரதேச சபையின் பவுசர் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அகழ்வுப் பகுதியில் தேங்கிய மழை நீர் வெளியேற்றப்பட்டது. இன்றைய பணிகளில் மேலும் ஒரு மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்பட்டதுடன், இதுவரை மொத்தம் 260 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்தால், நீதிமன்ற அனுமதியுடன் அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.