ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இலஞ்ச வழக்கு: போலிப் பிணையாளர்கள் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்தபோது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அந்த நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கு பிணையாளர்களாக வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரு சந்தேக நபர்களும் வாழைத்தோட்டம் பொலிஸாரால் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கடை நீதிமன்ற […]

அரசினால் அமெரிக்காவுக்கு செலுத்த வேண்டிய 626,000 டொலயும் காணவில்லை

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000 அமெரிக்க டொலருக்கும் அதிக பணம், இரண்டு சந்தர்ப்பங்களில் மூன்றாம் தரப்பு ஒன்றிற்கு மாற்றப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (06) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. மூன்று போலி மின்னஞ்சல்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தபால் திணைக்களம் இந்தப் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். தபால் திணைக்களம் மேற்கொண்ட வெளிநாட்டுச் செலுத்துகை ஒன்று உரிய தரப்பினருக்குக் கிடைக்காமை தொடர்பான […]

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: திமுக – அதிமுக கூட்டணி?

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு கோரி அதிமுக தரப்பிலிருந்து திமுகவிற்கு தூது அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் வௌியாகின. இருப்பினும், அதிமகவினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக அறியக்கிடைத்துள்ளது. மக்களின் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தங்களுக்கு விருப்பமில்லை என்பதால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தவிடயம் தொடர்பில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தமது எக்ஸ் […]

முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சிறையிலடைக்க முயன்றால் விபரீதமான பின்விளைவுகள் ஏற்படும்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏதேனும் குற்றச்சாட்டின் கீழ் சிறையிலடைக்க முயன்றால் கடும் விபரீதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று திஸ்ஸகுட்டி ஆரச்சி எச்சரித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு சொந்தமான டொரிங்க்டன் இல்லம் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ச இந்நாட்டின் மதிப்பிற்குரிய பெருமகன்களில் ஒருவர். யுத்தத்தை நிறைவு செய்து குண்டுகள் வெடிக்கும் […]