பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி விபத்தில் காலமானார்!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரும், சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபருமான ஆர்.பி. சௌத்ரி (வயது 70+), ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் இன்று காலமானார். இவருடைய மறைவு செய்தி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: தனது சொந்த வேலை நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலத்திற்குச் சென்றிருந்த ஆர்.பி. சௌத்ரி, உதய்பூர் அருகே காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீதி விபத்தில் சிக்கியுள்ளார். அவர் பயணித்த கார் […]
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம் குறித்து முக்கிய அறிவித்தல்

முல்லைத்தீவு – வற்றாப்பளை கிராமத்தில் அமைந்துள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் எதிர்வரும் யூன் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது. அத்துடன், பொங்கல் உற்சவத்திற்கான அதற்கான முன் ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வளாகத்திலுள்ள உணவு கையாளும் வியாபார நிலையங்களுக்கான அறிவுறுத்தல் ஒன்றினை வற்றாப்பளை பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று வெளியிட்டுள்ளனர். இதன்படி, உணவகம் சர்பத் கடை தவிர்ந்த ஏனைய உணவு கையாளும் நிலையங்களான ஜஸ்கிறீம் […]
சுகீஸ்வர பண்டார மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் நேற்று (05) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளனர். கடந்த (28) ஆம் திகதி நிதியமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் வீட்டிற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடச் சென்ற சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது, ஹர்ஷன சூரியப்பெருமவின் ஆதரவாளர்கள் குழுவொன்று மலத் தாக்குதல் நடத்தியதுடன், தம்மைத் தாக்கியதாகவும் குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காணியில் தோட்டாக்கள் மற்றும் சிறுத்தை உருவம் மீட்பு!

த்தளம், அட்டவில்லு பகுதியில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் காணியொன்றில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து நடத்திய சோதனையின் போது, தோட்டாக்கள், சிறுத்தை ஒன்றின் தோல் மற்றும் புள்ளிமான் தோல் என்பன மீட்கப்பட்டுள்ளன. விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கருவலகஸ்வெவ, ரிடிகல, குருநாகல் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் புத்தளம் பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் இணைந்து இந்தச் சோதனையை முன்னெடுத்தனர். இதன்போது, குறித்த காணியிலிருந்து […]
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் கோரல்

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப் பிரவேசத்திற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் எதிர்வரும் 2026 மே மாதம் 19 ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பான பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டினை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள புத்தகசாலைகளின் ஊடாக மாணவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம், இம்முறை மாணவர்களின் வசதிக்காக பல்கலைக்கழகப் பிரவேசக் கையேட்டின் மென்பொருளை பல்கலைக்கழக மானியங்கள் […]
வடமராட்சி கிழக்கு ஆழியவளையில் நள்ளிரவில் வீடு புகுந்து தாக்குதல்

வடமராட்சி கிழக்கு, ஆழியவளைப் பகுதியில் நேற்று நள்ளிரவு வீடு புகுந்த இருவர் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலில் வீட்டின் உடமைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஆழியவளைப் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டிற்குள் நேற்று நள்ளிரவு மதுபோதையில் அத்துமீறி நுழைந்த இருவர், அங்கிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவரை இலக்கு வைத்து மோசமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த இளைஞர் தப்பியோடி தனது உயிரைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார். அதனைத் […]
செம்மணியில் சிதைந்த நிலையில் குழந்தையின் எலும்புக்கூடு!

ம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 8-ஆம் நாளான நேற்று (05), குழந்தையின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், தங்கம் எனச் சந்தேகிக்கப்படும் ஆபரணம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய அகழ்வாராய்ச்சியின் போது 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட தொகுதிகளிலிருந்து, ஒரு குழந்தையின் எலும்புக்கூடு மற்றும் மற்றுமொரு எலும்புக்கூடு என இரண்டு தொகுதிகள் நேற்று மீட்கப்பட்டன. இதன்படி, செம்மணி மனிதப் புதைகுழியில் […]
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் வாக்குமூலம் பதிவுசெய்ய அனுமதி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, வெலிசர உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சக்திவாய்ந்த பாதாள உலகத் தலைவரான சமிந்த ரவி ஜயநாத் என்ற ‘தெமட்டகொட சமிந்தவிடம் வாக்குமூலம் பதிவுசெய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு குற்றப்பிரிவு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதிபதி அசங்க எஸ். பொதரகம நேற்று (05) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கணேமுல்ல சஞ்சீவ கடந்த ஆண்டு புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து […]