உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கை வருகை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) தலைமையிலான தூதுக்குழுவினர் இன்று (03) காலை இலங்கை வந்தடைந்தனர். மாஸ்கோவிலிருந்து ஏரோஃப்ளோட் (Aeroflot) நிறுவனத்திற்குச் சொந்தமான SU-288 விமானம் மூலம் அவர்கள் காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் முனையத்தில் (VIP terminal), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் […]

2019 உயிர்த்த ஞாயிறு எச்சரிக்கைகள் எவ்வாறு அமைந்தன என்பதை வெளிப்படுத்தும் புதிய வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட்கள்

2019 ஏப்ரல் 21 அன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னதாக, சாத்தியமான தாக்குதல் குறித்து அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளின் ஸ்கிரீன்ஷாட்டுகளை சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத் பகிர்ந்துள்ளார். இலங்கையின் அரச புலனாய்வுச் சேவையின் பணிப்பாளருக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையில் பரிமாறப்பட்டதாகக் கூறப்படும் இந்தச் செய்திகள், வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது சகாக்கள் […]

வட்டுக்கோட்டையில் வாள்வெட்டு; பெண்ணின் விரல் துண்டானது!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியகோவில் பகுதியில் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பெண்ணொருவரின் இரண்டு விரல்கள் துண்டாகின. இது குறித்து மேலும் தெரியவருகையில், அயல் வீட்டு இளைஞருக்கும் குறித்த பெண்ணின் குடும்பத்துக்கும் இடையே முரண்பாடு காணப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் வேலை முடிந்து வந்தவேளை அவரை வழிமறித்து அவரது துவிச்சக்கர வண்டியை குறித்த இளைஞன் பறித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து அவர் தனது மனைவிக்கு கூறிய நிலையில் மனைவி குறித்த இளைஞனுடன் […]

டொரன்டோவில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு; ஒக்டோபரில் நடாத்த ஏற்பாடு

“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு, எதிர்வரும் ஒக்ரோபர் 10ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை கனடா – டொரன்டோவில் மாநகரில் நடைபெற உள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பேராசிரியர்களான முனைவர் அ சண்முகதாசு, முனைவர் கி விசாகரூபன், முனைவர் போல் ரொகான், திருமதி விஜிதா திவாகரன் ஆகியோர் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக […]

சிறு போகத்திற்கான உரப் போக்குவரத்து கட்டணம் உயர்வினால் பெரும் சிக்கல்!

சிறு போகத்திற்கான உரங்களை விநியோகிக்கும்போது, விவசாயிகளிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். இதற்கு முன்னர் 50 ரூபாவாக இருந்த இந்தக் கட்டணம், தற்போது 300 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொழும்பில் இருந்து விவசாய சேவை மையங்களுக்கு உரங்களைக் கொண்டு செல்வதற்காக விவசாயிகளிடம் இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணமே இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு மூடை உரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக விவசாய சேவை மையங்களினால் தற்போது 9,550 ரூபாய் வசூலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, போதுமான […]

மழையுடனான வானிலை; மின்னல் குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை

ற்போது நிலவும் மழையுடனான வானிலையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் அத்துல கருணாரத்ன இன்று (03) இது தொடர்பாகக் கருத்து வெளியிடுகையில், இந்த மாத இறுதியளவில் மின்னலுடன் கூடிய மேகங்கள் உருவாகும் சாத்தியம் குறையக்கூடும் எனத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: “இந்தக் காலப்பகுதியில் மேகங்கள் மூலமே மின்னலுடன் கூடிய மழை பெய்கிறது. எனவே, பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. மின்னலுடன் கூடிய மழை […]

முச்சக்கர வண்டி கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எல். ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார். பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம் அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் முச்சக்கர வண்டி கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதால், எரிபொருள் விலை உயர்வை கவனத்தில் கொண்டு, தற்போது […]

தோட்டப் பகுதி மக்களுக்கு நீதிகோரி எழுச்சிப் போராட்டம்

தோட்டப் பகுதி மக்களுக்குப் பாதுகாப்பு மற்றும் நில உரிமைகள் கோரியும் இன்று (03) ஹட்டன் நகரில் எழுச்சி போராட்டம் ஒன்று முன்னெக்கப்பட்டது. இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் அரங்கேறிய வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், மலையக மக்களுக்கான காணி உரிமையை வலியுறுத்தியும் ஹட்டனில் “நாம் நீலகாமம்” இன் எழுச்சி போராட்டம் நடைபெற்றது . நாம் மலையகம் அமைப்பின் பிரதிநிதிகள், மலையக சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொது மக்கள், இளைஞர்கள் என பலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். மலையக […]

நீதிமன்றில் சந்திப்போம்”: பலாலி காவற்துறையின் மிரட்டலுக்கு தையிட்டி தவிசாளர் பதில்!

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை வளாகத்திற்குள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான வீதியை மீட்கும் விவகாரத்தில், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சோ. சுகிர்தன் அவர்களுக்கும் பலாலி காவற்துறையினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களின் சொத்தான “பவானி” வீதியை மீட்பதற்கான நடவடிக்கைகளைக் கைவிடுமாறு காவற்துறையினர் விடுத்த எச்சரிக்கையைத் தவிசாளர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். பிரதேச சபை தவிசாளர் அடாத்தாகத் தனது விகாரையின் வேலியை அகற்றப் போவதாக விகாராதிபதி பலாலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இது […]

அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க விசேட மேல் நீதிமன்ற ‘ட்ரயல்-அட்-பார்’ நியமனம்

கிரேக்க பிணைமுறி (Greek bond) விவகாரத்தில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறியமை தொடர்பாக, மத்திய வங்கியின் முன்னாள் அதிபர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிரான வழக்கை விசாரணை செய்ய, பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன விசேட நிரந்தர மூன்று பேர் கொண்ட மேல் நீதிமன்ற ‘ட்ரயல்-அட்-பார்’ (Trial-at-Bar) அமர்வை நியமித்துள்ளார். ஊழல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) கோரிக்கைக்கு இணங்க இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதியரசர்களான மனோஜ் தல்கொடபிட்டிய, உதேஷ் […]