“சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” – விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்!

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இசையமைப்பாளரும் ராஜ்யசபா எம்பியுமான இளையராஜா தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு பாடல் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. 1988-ல் விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘இது எங்கள் நீதி’ திரைப்படத்தில் இடம்பெற்ற “சின்ன தம்பி உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு” என்ற பாடலை அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் பாடலின் முகப்புப் படத்தில் (Thumbnail), நடிகை ராதிகாவுடன் […]
“விஜய் எந்தத் தொகுதியிலும் ஜெயிக்க மாட்டார்; மே 4-ல் திமுகவின் மோசமான ஆட்சிக்கு முடிவு வரும்” – நயினார் நாகேந்திரன் அதிரடி!
கன்னியாகுமரி: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், செய்தியாளர்களைச் சந்தித்தபோது தேர்தல் முடிவுகள் மற்றும் கருத்துக்கணிப்புகள் குறித்துத் தனது அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தற்போது வெளியாகியுள்ளவை கருத்துக்கணிப்புகள் அல்ல; அவை திமுக கூட்டணியால் திட்டமிட்டுச் செய்யப்பட்ட கருத்துத் திணிப்பு” என்று அவர் சாடினார். மேலும், தமிழக மக்கள் தற்போதைய ஆட்சிக்கு எதிராகக் கடும் அதிருப்தியில் […]
வடக்கில்பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள்

பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் தொடர்ச்சியாகக் கிடைத்துவந்த முறைப்பாடுகளையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட விசாரணைக் குழுவினர் வியாழக்கிழமை வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள 34 பாடசாலைகளில் ஒரே நேரத்தில் அதிரடி திடீர் கள ஆய்வுகளை மேற்கொண்டனர். வடக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் செயற்பாடுகளைக் கண்காணிக்கவும் பொதுமக்கள் முன்வைக்கும் முறைப்பாடுகள் குறித்து முறையான விசாரணைகளை முன்னெடுக்கவும் கௌரவ ஆளுநரின் நேரடிக் கண்காணிப்பின் […]
ராமநாதபுரம் அருகே 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுப்பு!
ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே உள்ள மேலத்தூவல் கிராமத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணத் தீர்த்தங்கரர் மகாவீரர் சிற்பம் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. 3 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட இந்த கருங்கல் சிற்பம், தாமரை பீடத்தின் மேல் அமர்ந்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. மகாவீரரின் தலைக்கு மேல் முக்குடை அமைப்பும், பின்புறம் ஒளிவட்டமும் (பிரபாவளி) அசோக மரத்தின் நிழலில் அவர் தியான நிலையில் இருப்பதும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் […]
கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா: மின்னல் தாக்கியதில் காவலர் உள்பட 11 பேர் காயம்!
தேனி: தேனி மாவட்டம் கூடலூர் அருகே 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா நேற்று (மே 1) விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பிய போது, மாலை 5 மணியளவில் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பாதையின் ஒன்பதாவது வளைவில் திடீரென மின்னல் தாக்கியது. இந்த விபத்தில் கேரள காவல்துறையைச் சேர்ந்த காவலர் அன்சார் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட மொத்தம் 11 […]
58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரான் மீது தொடுத்த போர் காரணமாக, சுமார் 58 நாள்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஈரானின் வான்பரப்பு மற்றும் விமான சேவைகள் தற்போது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. ஏப்ரல் 19 முதல் நான்கு கட்டங்களாக வான்பரப்பு திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 25 முதல் இமாம் கொமெய்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 இடங்களுக்கான சேவைகள் ஆரம்பமாகியுள்ளன. துருக்கி (இஸ்தான்புல்), சீனா, ரஷ்யா, ஓமான் (மஸ்கட்) மற்றும் சவுதி அரேபியா (மதீனா) உள்ளிட்ட நாடுகளுக்கு […]
காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் பணிகள்-வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர்

எமது வடபுலத்தின் சுற்றுலாத் துறையை சர்வதேச தரத்துக்கு இணையாகக் கொண்டு செல்லும் அரசாங்கத்தின் தூரநோக்குச் சிந்தனைக்கமைய, காரைநகர் கசூரினா கடற்கரையை நவீன வசதிகளுடன் கூடிய ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றியமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜே.விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் இந்த வெள்ளை மணல் கடற்கரைக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் […]
தேயிலைத் தொழிற்சாலையில் பாரிய தீ

நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூக்சைட் பகுதியிலுள்ள தேயிலைத் தொழிற்சாலையொன்றில் நேற்று (01) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: பழமைவாய்ந்த இந்தத் தேயிலைத் தொழிற்சாலையில் நேற்று அதிகாலை திடீரெனத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த ராகலை பொலிஸார், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நுவரெலியா மாநகர சபை தீயணைப்புப் படையினர் இணைந்து தீவிர முயற்சி மேற்கொண்ட போதிலும், தீயினை அணைக்க முடியாமல் தொழிற்சாலைக் கட்டடம் மற்றும் இயந்திரங்கள் […]
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானின் முன்மொழிவு; டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரான் முன்வைத்த சமீபத்திய பேச்சுவார்த்தை முன்மொழிவு குறித்து தான் திருப்தியடையவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஈரான் சில முன்னேற்றங்களைக் காட்டியுள்ள போதிலும், அவர்கள் ஒருபோதும் அந்த இலக்கை அடைவார்களா என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என அமெரிக்க ஜனாதிபதி கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் அரசாங்கம் பாகிஸ்தான் ஊடாக அமெரிக்காவிற்கு புதிய முன்மொழிவுத் திட்டமொன்றை அனுப்பியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி […]
லொறியின் பின்பகுதியில் சிக்குண்டு அதன் உதவியாளர் பலி

நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொறியின் பின்பகுதியில் சிக்குண்டு, அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியிலிருந்து நாவலப்பிட்டியிலுள்ள சிறப்பு அங்காடி கிளை ஒன்றுக்கு உணவுப் பொருட்களை ஏற்றி வந்த கனரக லொறி ஒன்று நேற்று (01) காலை பொருட்களை இறக்குவதற்காக பிரதான சாலையிலிருந்து பின்னோக்கி (Reverse) நகர்த்தப்பட்டுள்ளது. அப்போது, லொறியின் பின்புறத்திற்கும் அங்கிருந்த களஞ்சியசாலைச் சுவருக்கும் இடையிலான குறுகிய இடைவெளியில் லொறியின் உதவியாளர் […]