நாளையுடன் ஈரானுடனான போர்நிறுத்தம் நிறைவு: நீட்டிப்புக்கு வாய்ப்பில்லை – டிரம்ப்

ஈரான் உடனான போர்நிறுத்த ஒப்பந்தம் வரும் புதன்கிழமை மாலை (வாஷிங்டன் நேரப்படி) முடிவுக்கு வருவதாகவும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் அதனை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 7ஆம் திகதி இரவு ஆரம்பமான இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம், வரும் புதன்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. “போர்நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பு மிகக் குறைவு” (Highly unlikely) என ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த தொலைபேசி நேர்காணலில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். “தவறான […]
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நினைவுகூர்ந்து நாடு தழுவிய ரீதியில் விசேட மத வழிபாடுகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் இன்று (21) நாடு தழுவிய ரீதியில் விசேட மத வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளதாவது, இன்று காலை நாட்டின் அனைத்து தேவாலயங்களிலும் விசேட நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உயிரிழந்தவர்களின் நினைவாக தேவாலய மணிகள் ஒலிக்கச் செய்தல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி, மெழுகுவர்த்திகள் அல்லது விளக்குகள் ஏற்றுதல் மற்றும் விசேட பிரார்த்தனை […]
சொகுசு விமான கொள்முதல்: மக்களின் எதிர்ப்பால் முடிவை மாற்றிய டக் ஃபோர்டு

சுமார் 30 மில்லியன் டொலர் மதிப்பிலான தனியார் விமானத்தை வாங்கியதற்கு மக்கள் மத்தியில் எழுந்த கடும் எதிர்ப்பை அடுத்து, அதனை உடனடியாக விற்பனை செய்ய ஒன்ராறியோ அரசு ஒப்புக்கொண்டுள்ளது. திங்கட்கிழமை ஒட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் டக் ஃபோர்டு, “இப்போது விமானம் வாங்குவதற்கான சரியான நேரம் இதுவல்ல என்பதை மக்களின் கருத்துக்கள் மூலம் நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன். எனவே, கடந்த வாரம் நாம் வாங்கிய விலையிலேயே அந்த விமானத்தை உடனடியாக விற்பனை செய்யுமாறு […]
மன்னாரில் வீதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள்…

மன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சௌத்பார் பகுதியில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் மனித எச்சங்களை உரிய வகையில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை காரணமாக பாரிய சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். குறித்த பகுதியில் இயங்கி வரும் மனித உடல் பதப்படுத்தும் தனியார் நிலையத்தில், மனித உடல் பாகங்கள் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இறந்த உடல்களில் இருந்து அகற்றப்பட்ட மனித உடற் பாகங்கள் அந்த பகுதியில் நாய்களால் இழுத்துச் செல்லப்பட்டு பல்வேறு இடங்களில் […]
யாழ் – கண்டி வீதியில் விபத்து: இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியின் மருதங்கடவல, வனமல் உயன பகுதியில் அநுராதபுரத்திலிருந்து மருதங்கடவல நோக்கி பயணித்த ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியை விட்டு விலகி மின்சாரத் தூணுடன் மோதி பயங்கர விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (20) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், மருதங்கடவலையிலுள்ள தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அநுராதபுரம், சாலியபுர பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து பணிபுரியும் இடத்திற்கு மோட்டார் சைக்கிளில் […]
இன்று பலத்த மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் […]
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க பதவியேற்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அநுர கருணாதிலக்க நேற்று (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வலுசக்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வலுசக்தி அமைச்சுப் பதவிக்கு மேலதிகமாக, அவர் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சராகவும் கடமையாற்றுகிறார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றார்.