வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து: 10 பேர் காயம்

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று(15) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 2 கார்கள் என வரிசையாக ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மக்கள் தொடர்பாடல் அலுவலகம் யாழ்ப்பாணம், உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த அலுவலகத்தினை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் நாடாவை வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம், கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், உடுவில் பிரதேசசபை உறுப்பினர் தி.பிரகாஸ், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.சயந்தன், ச.சுகிர்தன் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணத்தில் […]
மோசடிகளுக்காக இலங்கை வந்த 9 சீனர்கள் கட்டுநாயக்கவில் கைது?

கணினி வழி நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த சீனப் பிரஜைகள் இன்று அதிகாலை 12:25 மணியளவில் சீனாவின் குன்மிங் நகரிலிருந்து ‘சைனா ஈஸ்டர்ன்’ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6912 ரக விமானம் மூலம் […]
வயிற்றுவலியுடன் வாந்தி; சிறுமி உயிரிழப்பு – யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர், இன்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டதுடன் அவர் வாந்தி எடுத்துள்ளார். நிலைமை மோசமடையவே, அதிகாலை 4:30 மணியளவில் சிறுமி […]
துருக்கிப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி

தெற்கு துருக்கியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாடசாலை மாணவன் ஒருவன் வகுப்பறைக்குள் நுழைந்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தாக்குதலில் மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஆறு பேர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. எட்டாம் தரத்தில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே […]