மார்சில் இலங்கையில் 814.8 மில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்றம்!
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, 2026 மார்ச் மாதத்தில் இலங்கை 814.8 மில்லியன் அமெரிக்க டொலர்களை தொழிலாளர் பணவனுப்பலாகப் பெற்றுள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2025 மார்ச் மாதத்தில் நாட்டுக்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியிருந்தது. அதற்கமைய, 2026 மார்ச் மாதத்திலான பணவனுப்பல் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 121.5 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான […]
வாகனம் செலுத்தும் விதி மீறல்களை முறைப்பாடு அளிக்க புதிய இலக்கம்

அபாயகரமான மற்றும் கவனக்குறைவான முறையில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் தொடர்பான வீடியோ காட்சிகளை சமர்ப்பிப்பதற்காக, பொலிஸ் தலைமையகம் புதிய ‘WhatsApp’ இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய, 070-4755600 என்ற இலக்கத்தின் ஊடாக வீடியோக்களை அனுப்பி வைக்க முடியும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ், இந்த இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த […]
மேற்கு ஆசியாவில் தற்காலிக போர்நிறுத்தம்: இலங்கை அரசு வரவேற்பு

மேற்கு ஆசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தையும், சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கான வாய்ப்புகளையும் இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், பரவலாகக் காணப்படும் மனிதாபிமானத் துயரங்களைக் குறைப்பதற்கும் இந்த முன்னேற்றம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை என்று விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வை நோக்கிய முயற்சிகளை முன்னெடுக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், பிராந்தியத்திலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் […]
கண்டி மற்றும் பேராதனையில் ஆலங்கட்டி மழை

கண்டி, பேராதனை மற்றும் பல்லேகலை ஆகிய பகுதிகளில் பெய்த பலத்த மழை மற்றும் கடும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார். மத்திய மாகாண சபை வளாகத்திற்கு அருகிலுள்ள வீதியில் நின்ற மூன்று பெரிய மரங்கள் கடும் காற்றினால் முறிந்து வீழ்ந்துள்ளன. இதன்போது, அவ்வீதியால் பயணித்த ஓட்டோ ஒன்று பலத்த சேதமடைந்ததுடன், அதன் சாரதி காயமடைந்துள்ளார். அத்துடன், மற்றுமொரு தனியார் பஸ் ஒன்றும் சிறியளவில் சேதமடைந்துள்ளது. இந்த அனர்த்தத்தில் எவருக்கும் பாரிய […]
வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாள விசேட செயலி !

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள குளங்களிலிருந்து மணலைக் கழுவி எடுத்து, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விற்பனை செய்யும் புதிய பொறிமுறையை விரைவில் உருவாக்கவும், வடக்கு மாகாணத்தின் மணல் விநியோக நடவடிக்கைகளைக் கையாளவும் கண்காணிக்கவும் தனியானதொரு செயலியை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் மற்றும் தூய்மை இலங்கை செயலணியின் மாகாண இணைப்பாளரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரின் பிரதிநிதியுமான சு.கபிலன் ஆகியோரின் விசேட பங்கேற்புடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இக்கூட்டம் நேற்று […]
செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்; தாளையடியில் சம்பவம்

வடமராட்சி கிழக்கு, தாளையடி பகுதியில் கரைவலைத் தொழிலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘நாரா’ (NARA) நிறுவனம் மேற்கொண்ட ஆய்வைச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் மற்றும் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் தங்கரூபன் ஆகியோருக்குக் கரைவலை சம்மாட்டி ஒருவரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: நாடு முழுவதும் உழவு இயந்திரங்களைப் பயன்படுத்தி கரைவலைத் தொழிலில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடற்தொழில் நீரியல் வளத் […]
சமூக ஊடக விமர்சகர்களுக்கு இந்தியாவில் ஒழுங்குமுறை வரம்பு

முகநூல் , யூடியூப் மற்றும் எக்ஸ் (X) போன்ற தளங்களில் செய்திகளைப் பகிரும் செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் போட்காஸ்டர்களைத் தங்களது ஒழுங்குமுறை வரம்பிற்குள் கொண்டு வர இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) அண்மையில் முன்மொழிந்துள்ள தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, “செய்தி வெளியீட்டாளர்கள் அல்லாத பயனர்கள்” நடப்பு விவகாரங்கள் குறித்துப் பதிவிடும்போது, அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்கள் பின்பற்றும் அதே ‘அறநெறிக் கோவை’யைப் (Code of Ethics) பின்பற்ற வேண்டும். இது குறித்துக் கருத்துத் […]
யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து : 10 பேர் பலி

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், பஞ்சாபைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி பிருந்தாவன் யமுனை ஆற்றில் கவிழ்ந்தது. நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த படகு விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். படகு ஆற்றில் கவிழ்ந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் 2 படகுகளில் விரைந்து சென்று, தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், பாதிக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில், 10 பேர் பரிதாபமாக பலியாகினர். […]
ஏப்ரல் 17-இல் தையிட்டி விகாரை காணி அளவீட்டுப் பணிகள்

யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை விடுவிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, எதிர்வரும் ஏப்ரல் 17-ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக நிலவி வரும் தையிட்டி விகாரை காணி சர்ச்சை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விகாரை அமைந்துள்ள மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகள் எதிர்வரும் 2026 ஏப்ரல் 17-ஆம் திகதி நில அளவைத் […]
நாட்டில் உரத் தட்டுப்பாடு இல்லை; தேவைக்கும் அதிகமான கையிருப்பு உள்ளது

நாட்டில் உரத் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படும் தகவல்களை மறுத்துள்ள விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, தற்போது விவசாயத் தேவைக்கும் அதிகமான உரக் கையிருப்பு உள்ளதாக உறுதி அளித்துள்ளார். எதிர்வரும் மகா பருவச் செய்கைக்காக (Maha season) போதிய அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன. கடந்த யால பருவத்தில் 13,000 மெட்ரிக் தொன் பொட்டாஷ் உரம் (MOP) பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது 38,000 மெட்ரிக் தொன் கையிருப்பில் உள்ளது. யூரியா தட்டுப்பாடு குறித்த […]