அமைதி ஒப்பந்தத்திற்கு இணக்கம்; ஹோர்முஸ் நீரிணையை 9 கப்பல்கள் கடந்துள்ளன?

ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் செல்வதற்கு ஈரான் அரசாங்கம் அனுமதிக்குமா என்பதில் தொடர்ந்து நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. இரண்டு வார கால அமைதி ஒப்பந்தத்திற்கு இணக்கம் ஏற்பட்டிருந்த நிலையில் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதாக ஈரான் அறிவித்தது. எனினும், இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் அந்த கடல்வழிப் பாதையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது. அத்துடன் தமது கட்டளையை மீறி பயணிக்கும் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மரைன் டிராஃபிக் தளத்தின் […]
அவசரகால நிலையை நீடிக்கும் பிரேரணை நிறைவேற்றம்

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணைக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர் அர்ஜுனா ராமநாதனும் இப்பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், இப்பிரேரணை தொடர்பாக […]
அரசியல் பகடைக்காய்களாக முன்னாள் போராளிகளைப் பாவிக்க முனைவதை வன்மையாகக் கண்டிக்கிறோம் – அருட்தந்தை மா.சத்திவேல்

முன்னாள் போராளிகளை அரசியல் பகடைகாய்களாக பாவிக்க முனைவதை அரசியல் கைதிகளை விடுதலைக்காக தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் நிலை தளம்பலில் தள்ளாடும் தமிழரசு கட்சி சிங்கள பௌத்த பேரினமாக அரசியலுக்கு முண்டு கொடுத்து அதனை முன்னெடுக்கவும், சுகபோக பதவி அரசியலை தொடரவும், தமிழர்களின் தேச […]
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு பெரிய சதித்திட்டத்தின் அங்கம் – பொதுப்பாதுகாப்பு அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல என்றும், அது 2017-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் ஒரு பெரிய சதித்திட்டத்தின் அங்கம் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்தார். இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், இந்த ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதியுடன் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் நடந்து ஏழு ஆண்டுகள் நிறைவடையவுள்ளதைச் சுட்டிக்காட்டினார். ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் இதுவரை 12 விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய விவாதம் […]
செப்டம்பர் வரை வறட்சி நீடிக்கலாம்?

தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்னகே, இந்த நிலைமையைக் கருத்திற்கொண்டு குடிநீர் மற்றும் அனைத்து நீர்ப்பாசன நடவடிக்கைகளிலும் முறையான நீர் முகாமைத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், தற்போது நிலவும் வெப்பமான வானிலை […]
இஸ்ரேல் லெபனான் முழுவதும் நடத்திய தாக்குதல்: ஐநா பொதுச்செயலாளர் கண்டனம்

லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர். பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவரது ஊடகப் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக், “பொதுமக்களின் உயிரிழப்புகளை பொதுச்செயலாளர் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பொதுமக்களின் மரணங்கள் குறித்து அவர் மிகுந்த கவலை கொண்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார். லெபனானில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் […]
விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து ஐஸ் போதைப்பொருள் கடத்தல்!

விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து, கொரியர் சேவை ஊடாகக் கடத்தி வரப்பட்ட ‘ஐஸ்’ போதைப்பொருள் கல்முனையில் மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம், கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று (08) மாலை இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் (D.C.D.B) பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ். ரத்நாயக்கவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, காரைதீவு பிரதேச […]
கறுப்புக் கொடிகளை பறக்கவிட்டு வைத்தியர்கள் போராட்டம்!

சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) காலை 8.00 மணி முதல் 48 மணி நேர வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினராலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது வைத்தியசாலை வளாகம் முழுவதும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட பொது […]
கல்கிசை – காங்கேசன்துறை; ரயில் சேவைகள் ஆரம்பம்

டித்வா சூறாவளியினால் சேதமடைந்திருந்த வடக்கு ரயில் மார்க்கம் புனரமைக்கப்பட்டு கொழும்பு, கல்கிசை – காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் இன்று (09) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. புனரமைப்பு பணிகளுக்காக ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. தற்காலிகமாக புனரமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் திகதி முதல் ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கிடையிலான ரயில்கள் குறைந்த வேகத்துடனேயே பயணித்தன. சேதமடைந்த பகுதிகளை முழுமையாக புனரமைப்பதற்காக வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் கடந்த ஜனவரி 19 ஆம் […]
அரச வைத்திய அதிகாரிகள் சங்க அநியாயமானது!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், “இவ்வாறான முறையில் நடந்துகொண்டால் இன்று வழங்கப்பட்டிருந்த பேச்சுவார்த்தையை நான் நடத்தமாட்டேன். இந்த வேலைநிறுத்தம் அநியாயமானது. இதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் முகங்கொடுக்கத் தயாராக உள்ளோம்” எனத் குறிப்பிட்டார். அரசியல் நோக்கங்களுக்காக ஒரு சிறிய குழுவினால் முன்னெடுக்கப்படும் இந்த வேலைநிறுத்தத்தை தொடர வேண்டாம் எனத் […]