இன்று முதல் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்

இன்று (6) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 5,000 ரூபாய் வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணம் முழுமையாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் எட்டும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். […]
லாஃப்ஸ் எரிவாயு விலையும் அதிகரிப்பு

நேற்று(5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 1070 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அதன் புதிய விலை 5,700 ரூபாயாகும் அதேநேரம் 5 கிலோ கிராம் நிறையுடைய லாஃப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலனின் விலை 418 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 2,280 ரூபாயாகும்.