யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்புத்துறை பகுதியில் நேற்று (25-03-2026) கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறைப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?

ஹட்டனில் மக்களின் பிரச்சிகளை தீர்க்குமாறு பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் நகரசபை நிர்வாகத்தினாலும் தலைவரினாலும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை தெரிவித்து நேற்று ஹட்டன் டிக்கோயா நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போது உறுப்பினருமான அழகுமுத்து நந்தகுமார் நேற்று சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். ஹட்டன் நகர சபையின் மாதந்த கூட்டம் நேற்று முன்தினம் ஆம் திகதி நகரசபையின் தலைவர் அசோக சேனாரத்ன தலைமையில் நடைபெற்றது. இந்த வெளிநடப்பு […]

வறட்சியான காலநிலை; தண்ணீர் பாவனை தொடர்பில் எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காணமாக தண்ணீர் விநியோகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்ணீரை வீணாக்க வேண்டாம் என நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தலைவர், பொறியாளர் சந்தன பண்டார விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாக தண்ணீர் வழங்குவதில் சில சிரமங்கள் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதைத் தவிர்க்க, தண்ணீரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் […]

வீதி விபத்தில் ஒருவர் பலி; யாழில் சம்பவம்

யாழில் வீதியில் பயணித்த நபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் நேற்றையதினம்(25.3.2026) உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – நாவலர் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 18ஆம் திகதி கஸ்தூரியார் வீதியால் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். இதன்போது வலதுபக்கம் திரும்புவதற்காக மத்திய கோட்டை நோக்கி சென்றவேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் […]

உலகளவில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு – யுனெஸ்கோ

உலகளவில் பாடசாலைக்கு செல்லாத மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏழாவது ஆண்டாக அதிகரித்து வருவதாக யுனெஸ்கோ (UNESCO) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை எச்சரித்துள்ளது. 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 27.3 கோடி (273 million) குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் முறையான கல்வி வசதியின்றி உள்ளனர். கடந்த 2024 அக்டோபரில் கணிக்கப்பட்ட 25.1 கோடியுடன் ஒப்பிடும்போது, இது 2.2 கோடி அதிகரிப்பைக் காட்டுகிறது. மக்கள் தொகை வளர்ச்சி, பல்வேறு நாடுகளில் நிலவும் போர்கள் மற்றும் நிதி நெருக்கடிகள் ஆகியவையே இந்த […]

முத்து நகர் விவசாய காணி சூரிய மின்சக்தி உற்பத்திக்காக குத்தகைக்கு வழங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிப்பு!

திருகோணமலை-முத்து நகர் விவசாய காணியை இந்தியாவின் சூரிய மின்சக்தி உற்பத்திக்காக குத்தகைக்கு வழங்கியுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கிழக்கு மாகாண நில மீட்புக்கான வலையமைப்பின் செயற்பாட்டாளர் சஹீலா சபருள்ளா தெரிவித்தார். காணி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் உள்ள தனியார் விடுதியில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் 53 வருடங்களாக வேளாண்மை செய்கையை நம்பி வாழ்ந்து வந்தோம். ஜீவனோபாயம் தற்போது பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளோம். இதனால் 352 விவசாய குடும்பங்கள் பாதிப்புக்கு […]

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம்; இன்று வருகிறது சர்வதேச நாணய நிதியக் குழு

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினர் இன்று வியாழக்கிழமை (26) நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் கட்ட மீளாய்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் ஏற்கனவே எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு, இயக்குநர் சபையின் ஒப்புதலுக்காக 2025 […]

டொனால்ட் டிரம்ப் எப்போதும் அமைதியை விரும்புகிறார் – வெள்ளை மாளிகை ஊடக செயலாளர்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எப்போதும் அமைதியை விரும்புகிறார் என வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், ஈரான் தனது இராணுவத் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தவறி தொடர்ந்து மோதலை முன்னெடுத்தால், அதற்கு முன்பைவிட கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி டிரம்ப் தனது நிலைப்பாடுகளில் ஒருபோதும் பின்னடைவதில்லை என்றும், அவர் கூறுவது வெறும் மிரட்டல் அல்ல என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.