ஏயர் கனடா தலைமைச் செயல் அதிகாரியின் ஆங்கில மொழி அறிக்கைக்கு பிரதமர் மார்க் கார்னி கண்டனம்

லகுவார்டியா விமான நிலையத்தில் (LaGuardia Airport) நடந்த ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் போது, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) மைக்கேல் ரூசோ (Michael Rousseau) ஆங்கிலத்தில் மட்டுமே பேசியதற்காகப் பிரதமர் மார்க் கார்னி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மொழிக் சர்ச்சை: விபத்தில் உயிரிழந்த விமானிகளில் ஒருவர் கியூபெக் (Quebec) மாகாணத்தைச் சேர்ந்தவர். கியூபெக் ஒரு பிரெஞ்சு மொழி பேசும் மாகாணம் என்பதால், இரங்கல் செய்தியில் பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தாதது பெரிய […]
மத்திய வங்கியின் எச்சரிக்கை
மத்திய கிழக்கு போர் பதற்றம் தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எரிசக்தி, சுற்றுலாத்துறை, வர்த்தகம், அந்நிய செலாவணி போன்ற துறைகளின் ஊடாக பொருளாதாரத்திற்கு பாதக விளைவுகள் ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய கிழக்கு போர் பதற்றம் எவ்வாறான பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது குறித்த நிச்சயமற்றதன்மை காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ரூபாவின் […]
காணி கையகப்படுத்தல் குற்றச்சாட்டு:மன்னிப்புக் கோரிய பணிப்பாளர்

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகள் சமிந்ராணி கிரியெல்ல சட்டவிரோதமாக காணி கையகப்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என தெரியவந்துள்ளது. ஹந்தானை பகுதியில் 43 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்ராணி கிரியெல்லவின் பெயரை தவறாக தொடர்புபடுத்தியமைக்காக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லியனகே பத்மசிறி உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதி பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (cope) […]
ட்ரம்ப்கைப் புகழந்த ஈரானிய நடிகையின் சர்கச்சைக்குரிய கருத்து!

ஈரானுக்கு எதிரான போர் தொடர்பில் ஈரானிய நடிகையான எல்னாஸ் நோரூசி அவுஸ்திரேலியா தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கை தொடர்பில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்துள்ளார். அந்த செவ்வியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஈரானின் அணு ஆயுத மேம்பாட்டு திட்டங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக 47 வருடங்களாக அமெரிக்காவின் ஜனாதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தாலும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. ஆனால் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஈரானிடமிருந்து உலத்தையே மீட்டுள்ளனர். ஈரானின் […]
சந்தேக நபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்கள்
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) மூன்றாம் பிரிவின் கீழ் குற்றச்சாட்டுகளுக்காக சந்தேகநபர்களை கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு, அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவுகளின்படி, ஒரு நபரை கைது செய்யும் முன் அவர் வெளியிட்ட கருத்து அல்லது உரையால், போரைத் தூண்டுகிறதா, […]
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தையில் நுகர்வோர் அநீதிக்குள்ளாக்கப்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில வர்த்தகர்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைப்பதன் மூலம் சந்தையில் செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்கவும், பொருட்களின் விலைகளை நியாயமற்ற முறையில் […]
விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 10 கோடியே 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளை கடத்தி செல்ல முயன்ற இருவர் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று வியாழக்கிழமை (26) அதிகாலை, கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். “கிரீன் சேனல்” ஊடாக இந்த போதைப்பொருள் தொகையை கடத்தி செல்ல முயன்ற போதே இவர்கள் சிக்கியுள்ளனர். பொகவந்தலாவ பிரதேசத்தைச் […]
ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம்
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரினி அமரசூரியவுடன் நடைபெற்ற சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பிய வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது. பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்கத் தவறிய ஆசிரியர்களிடம் அதற்கான விளக்கம் கோரி கல்வி பணிமனை கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தங்காலையில் அண்மையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிரசன்னமாகத் தவறிய ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரதமருடனான சந்திப்பில் பங்கேற்காத ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் | Teachers Harini தங்காலை கல்விப் பணிமனையின் பணிப்பாளரினால் […]
அரசின் முறையற்ற நிர்வாகத்தால் மின்சாரக் கட்டணம் உயர்ந்தால் பாரிய போராட்டம்

அரசின் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல்களினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை மக்கள் மீது சுமத்த இடமளிக்க முடியாது. அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராடத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க இது தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், “உலக சந்தையில் மசகு எண்ணெய் […]
எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மணல் விலையும் உயர்வு

நாட்டில் அண்மையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்டுமானப் பொருட்களின் விலைகளும் பாரியளவில் உயர்ந்துள்ளன. இதனால் நாட்டின் கட்டுமானத் துறை கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்னர் 23,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு ‘கான்டர்’ மணலின் விலை, தற்போது 2,000 முதல் 3,000 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது ஒரு கான்டர் மணல் 25,000 முதல் 26,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மணல் அகழ்வு மற்றும் விற்பனை நிலையங்களை […]