பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு நிவாரணப் பொதி வழங்க வேண்டும்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறையினருக்கு (MSMEs) அரசாங்கம் உடனடியாக நிவாரணப் பொதியொன்றை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து புதன்கிழமை (25) அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள்: பொருளாதாரத்தில் MSME துறையின் முக்கியத்துவம்: வேலைவாய்ப்பு: நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான வணிகங்கள் ஊடாக சுமார் 4.5 மில்லியன் (45 இலட்சம்) பேருக்கு வேலைவாய்ப்புகள் […]
சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நிறுத்தவில்லை

“சர்வதேச யுத்தச் சூழல் காரணமாக நாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், மக்களுக்குத் தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை நாங்கள் நிறுத்தவில்லை.” என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். ‘டிட்வா’ புயல் காரணமாக நாடளாவிய ரீதியில் சேதமடைந்த வீதிகளைப் புனரமைக்கும் பாரிய வேலைத்திட்டம் புதன்கிழமை (25) அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் நுவரெலியா மாவட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு, நுவரெலியா ஹாவாஎலிய ‘சிட்டி சந்தி’ பகுதியில் இடம்பெற்றது. “முந்தைய […]
சோனியா காந்தியின் உடல்நிலை பாதிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் பாராளுமன்றக் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவுமனையில் செவ்வாய்க்கிழமை (24) அன்று அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதை சோனியா காந்தி உணர்ந்ததாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. சோனியா காந்தியின் உடல்நிலை கவலைக்குரிய தீவிர பாதிப்புகள் ஏதும் இல்லை என்றும், அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து […]
சீகிரியாவின் புனித பூமியில் கழிவு கொட்டியவர்கள் கைது

சீகிரியாவிலுள்ள பிரபல சுற்றுலா விடுதி ஒன்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை, சீகிரியாவின் புனித பூமியில் கொட்டிய குற்றச்சாட்டில் மூவரைச் சீகிரியா வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சீகிரியா வனவிலங்கு அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சீகிரியா வனவிலங்குப் பிராந்தியப் பாதுகாப்பு அதிகாரி எஸ்.எஸ். மலிந்த அவர்களின் வழிகாட்டலில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திணைக்கள ஊழியர்கள் உட்படச் சுமார் 50 பேர் இந்த விசேட தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விடுதியிலிருந்து வெளியேற்றப்படும் அனைத்துக் கழிவுகளும் […]
விபத்தில் தாயும் மகனும் பலி
ஊராபொல – ருவன்வெல்ல வீதியின் சப்புகஸ்தென்ன, லிஹினியாகொல்ல பகுதியில் லொறி ஒன்றும் முச்சக்கரவண்டியும் மோதியதில், முச்சக்கரவண்டியில் பயணித்த தாயும் மகனும் உயிரிழந்துள்ளதாக அத்தனகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சப்புகஸ்தென்ன, நிஹெட்டிகந்த முகவரியில் வசிக்கும் முச்சக்கரவண்டியின் சாரதியான 30 வயதுடைய ஒகதவத்த ஹேவகே திலிண மதுஷான் அபேரத்ன மற்றும் அவரது தாயாரான 58 வயதுடைய நாபயலாகே சுமித்ரா ரத்னாவதி என்ற இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி ஊராபொல திசையிலிருந்து ருவன்வெல்ல நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிரே […]
பங்களாதேஷில் பஸ் ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழப்பு

பங்களாதேஷில் 40 பயணிகளுடன் சென்ற பஸ் ஒன்று புதன்கிழமை (25) மாலை படகில் ஏற முயன்றபோது எதிர்பாராதவிதமாக ஆற்றில் கவிழ்ந்ததில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பங்களாதேஷின் தென்மேற்கு பகுதியான ராஜ்பாரி அருகே உள்ளது தவுலத்தியா படகு முனையம். பெருக்கெடுத்து ஓடும் பத்மா ஆறு தலைநகர் டாக்காவை தென்மேற்கு பகுதியில் இருந்து பிரிப்பதால் இந்த ஆற்றை கடக்க படகு போக்குவரத்துதான் பிரதானமாகும். மேலும் பஸ்கள் மற்றும் சிறிய ரக வாகனங்கள் கூட படகுகளின் மூலமாகவே ஆற்றைக் […]
மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்?
எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் கவலைகளுக்கு மத்தியில், மே மாதப் பாதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31-ஆம் திகதி வரை எரிபொருள் கப்பல்கள் […]
திரு செல்வமணி ஸ்ரீபாலன்

வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு செல்வமணி ஸ்ரீபாலன் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற செல்வமணி, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், குலநாயகம் சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மருமகனும், அனுஷியா அவர்களின் அன்புக் கணவரும், சந்தோஷ், மனோஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகிதா, சுவேனா ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரோகிணி தேவி(Rathy, பிரான்ஸ்), ஸ்ரீபதி(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீமோகன், ஸ்ரீகரன்(பிரான்ஸ்), ஸ்ரீபரன்(பிரான்ஸ்), ஸ்ரீதரன்(கனடா), […]
தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் தமிழ்த் தேசியப் பேரவையினர் – ஐ.நா. பிரதிநிதி சந்திப்புவிடப் பிரதிநிதி மார்க் ஆன்ட்ரே பிராஞ்சே யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இதன் அடிப்படையில் இன்று வியாழக்கிழமை (26.03.2026) யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் அவருக்கும் தமிழ்த் தேசியப் பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன், கொள்கை பரப்புச் செயலாளர் ந. […]
யாழில் இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

இணையவழிக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நல்லூர் பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட குடிசார் சம்மேளனம் மற்றும் யாழ்மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு என்பன இணைந்து இச்செயலமர்வை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இணையவழிக் குற்றங்களை அடையாளம் காணும் திறன் பாதுகாப்பான இணையப் பயன்பாட்டு நடைமுறைகள் இளைஞர்களின் உரிமைகள் மற்றும் சட்ட ரீதியான பாதுகாப்பு முறைப்பாடு செய்யும் நடைமுறைகள் மற்றும் இணைய வழிக் குற்றத்தடுப்புப் பிரிவின் பங்கு போன்ற விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேசசெயலக கிராம […]