சித்திரைப் புத்தாண்டுக்கு முன் க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே நேற்று முன்தினம் (24) உறுதிப்படுத்தியுள்ளார். நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான உயர்தர பரீட்சையின் சில பாடங்கள், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 12 முதல் 20 வரை மீண்டும் நடத்தப்பட்டன. இதற்கமையஈ அனைத்து பரீட்சைகளும் […]
கார்க் தீவை எதிரிகள் கைப்பற்றத் திட்டம்

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பெயரிடப்படாத ஒரு நாட்டின் ஆதரவுடன் எதிரி நாடுகள் ஈரானுக்குச் சொந்தமான தீவுகளை கைப்பற்ற முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக ஈரானிய பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மொஹமட் பாகர் காலிபாப் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் அதிக பங்கு வகிக்கும் கார்க் தீவை ஆக்கிரமிக்க எதிரிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு தகவல்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். […]
வெப்பநிலை அதிகரிப்பு; செல்லப்பிராணிகள் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக உயர்ந்து வருவதால் இலங்கையில் விலங்குகள் ஒரு அமைதியான வெப்ப நெருக்கடியை எதிர்கொள்வதாக கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் செல்லப்பிராணிகள், பண்ணை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு நீரிழப்பு ஒரு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் கால்நடை மருத்துவ சங்கத்தின் செயலாளர் வைத்தியர் உதிதா விஜேசிங்க தெரிவிக்கையில், மனிதர்களைப் போலவே விலங்குகளும் கடும் வெப்பத்தின் போது வெப்பத்தாக்கம், தோல் தடிப்புகள், வெயிலினால் ஏற்படும் தோல் எரிச்சல், நோய்கள் […]
எரிசக்தி துறைகளில் ஒத்துழைப்பை பலப்படுத்த சீனா இணக்கம்

கெமரூன் நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள், எரிசக்தி மற்றும் விவசாயத் துறைகளை மேம்படுத்துவதற்கு சீனா முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கெமரூன் தலைநகர் யாவுண்டேவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்திற்கு இடையே, சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தனது கெமரூன் நாட்டு சக அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நட்புறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வீதிகள், பாலங்கள் […]
சமஸ்டி அடிப்படையிலான ஆட்சிகுறித்து கனடா உயர்ஸ்தானிகரிடம் சாணக்கியன் வலியுறுத்தல்

தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் தீர்வாக சமஸ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பு மற்றும் உண்மையான அதிகாரப் பங்கீடு அவசியம் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினிடம் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வலியுறுத்தினார். அண்மையில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினை தனிப்பட்ட முறையில் சந்தித்து சாணக்கியன் கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அந்த சந்திப்பின்போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் குறித்த விடயங்களை சாணக்கியன் முன்வைத்தார். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி, […]
மட்டக்களப்பில் பெண்களுக்கு நடந்த வன்முறைக்கு நீதிகோரிப் போராட்டம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியும், நடந்த அநியாயத்திற்கான நீதியை பெற்று தருமாறும் கோரிக்கை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்று(26.03.2026) கொக்கட்டிச்சோலை நகரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மண்முனை தென்மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் இளையதம்பி கிரேஸ்குமாரன் தலைமையில் மண்முனை தென்மேற்குப் பிரதேச முச்சக்கர வண்டி உரிமையாளர் நலன்புரி கூட்டுறவுச்சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பட்டம் இடம்பெற்றுள்ளது. கடந்த […]
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலையில் பிள்ளையான் குழுவுக்கும் தொடர்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இன்றையதினம்(26.03.2026) வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றவாளிகள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் மறு விசாரணைக்காக மீண்டும் வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக சட்டத்தரணி மதிசுதன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மித்தெனிய ஐஸ் போதை இராசயனங்கள் புதைக்கப்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் மனம்பேரி அரச தரப்பு சாட்சியாக முன்னர் மாறியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொலைக் குற்றச்சாட்டின் […]
ஜலசந்தி ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை: இஸ்ரேல் அறிவிப்பு

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கிய ஈரான் தளபதி அலிரேசா டங்சிரியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கடற்படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கியவர் அலிரேசா டங்சிரி! ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால் சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில், அவரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் போர் தொடர்ந்து வருகிறது. 4வது வாரமாகப் போர் தொடரும் சூழலில், தற்போது வரை போர் முடிவுக்கு வருவது போலவே தெரியவில்லை. அமெரிக்கா மோதலை முடிவுக்குக் கொண்டு வர […]
விபத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் கைது
பத்து ஒன்றுடன் தொடர்புடைய நபரிடம் இலஞ்சம் பெற முயன்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். அக்கறைப்பற்று பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டவரை நீதிமன்றத்திற்குச் செல்லவிடாது தடுத்து, அதனைச் சமரசமாக முடித்து வைப்பதாகக் கூறி, விபத்தை ஏற்படுத்தியவரிடம் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணம் கோரியுள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபர், 4,000 ரூபாவினை லஞ்சமாக வழங்க முயன்றபோது, அங்கு சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலஞ்ச […]
இத்தாலி பொலிஸில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கையர் சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்பு

இத்தாலி பொலிஸ் சேவையில் பணியாற்றிய ஒரேயொரு இலங்கை அதிகாரி என அறியப்படும் ஷெஹான் பெர்னாண்டோ, மிலானோ நகரில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். வென்னப்புவ – தல்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய ஷெஹான் பெர்னாண்டோ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிலானோ நகரில் அமைந்துள்ள பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலுக்கு அருகில் அவரது சேவை துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் தனது […]