நீதிமன்ற வளாகத்திற்குள் பெண்ணொருவர் குத்திக் கொலை!

குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தால் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். மொரகொல்லகம பகுதியை சேர்ந்த வீரரத்ன பிரதீப டி சில்வா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றுக் காலை சுமார் 09.20 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது. கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த அப்பெண், உடனடியாக கல்கமுவ […]
நாடாளுமன்ற உறுப்பினர் சாமரவுக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் நேற்று(24.03.2026) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஊவா மாகாண முதலமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், மாகாண சபைக்கு வழங்கப்பட்ட காசோலையொன்றைத் தனது தனிப்பட்ட […]
எரிபொருள் விலையை தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாகக் அதிகரிப்பதாகக் குற்றசாட்டு!

அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை அதிகரித்தமையானது பொதுமக்கள், வர்த்தக சமூகம், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் என அனைத்துத் தரப்பினரையும் பாரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் நேற்று (24.3.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், .கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடிகள் நிலவியபோது, சினோபெக் மற்றும் ஷெல் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு அனுமதி […]
கிளிநொச்சியில் சட்டவிரோத கடற்றொழில்; இந்திய கடற்றொழிலாளர்களுக்கு கடூழிய சிறை

இரணைதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட இரண்டு இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நான்கு மாத கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி – பூநகரி இரணை தீவிற்கு அன்மித்த கடல் பகுதியில் கடந்த (12.03.2026) அதிகாலை சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களையும் அவர்கள் தொழிலுக்கு பயன்படுத்திய மீன்பிடி படகினையும் கடற்படையினர் கைது செய்து ஆரம்பகட்ட விசாரணைகளைத் தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளுக்காக […]
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி
வலுசக்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் விசேட நிபுணர் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. 12 உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. தேசியப் பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் புதுமையான மற்றும் தொலைநோக்கு அணுகுமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்துவதன் முக்கியத்துவத்துவத்தை கருத்திற்கொண்டு இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, வலுசக்தி பொருளாதாரம் ஒரு முன்னுரிமைத் துறையாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், முக்கிய பொருளாதாரத் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் […]
யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமையால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நெருக்கடிகளுக்கு தீ்ர்வுகாண எந்த முன் ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை. அரசாங்கத்திடம் எந்த முகாமைத்துவமும் இல்லாமையே நெருக்கடிக்கு காரணமாகும். அதனால் அரசாங்கம் மக்களுக்கு நிவாரணம் வழங்க தவறினால் நீண்டகாலம் செல்ல முன்னர் மக்கள் வீதிக்கிறங்குவதை தடுக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற மக்கள் சந்தி்பாென்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு […]
யாழ்.பல்கலை நிர்வாகப் பணிகளில் இருந்து விடைபெற்றார் சற்குணராஜா

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கணிதவியல் பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறி சற்குணராஜா, கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்றுடன் விடை பெற்று சென்றுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஓகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஓகஸ்ட் முதல் நேற்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேரா சிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா […]
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் வட மாகாண ஆளுநருக்கு இடையில் விசேட உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) மற்றும் வட மாகாண ஆளுநர் என். வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் தொடக்கத்தில், மாகாணத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் முன்னுரிமைத் தேவைகளை ஆளுநர் விளக்கினார். பொருளாதார மேம்பாடு, காணிப் பிரச்சினைகள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், மற்றும் நெகிழ்வுத்திறன் கொண்ட வாழ்வாதாரங்கள் ஆகிய நான்கு முக்கிய துறைகளின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களைப் […]
பொதுச் சேவையில் இணைந்துள்ளவர்கள் மிகவும் நேர்மையான முறையில் சேவையாற்ற முன்வர வேண்டும் – வட மாகாண ஆளுநர்

எவ்வித அரசியல் தலையீடுகளோ, இலஞ்ச ஊழல் மோசடிகளோ இன்றி மிகவும் நேர்மையான முறையில் வடக்கு மாகாண பொதுச் சேவையில் இணைந்துள்ள புதிய உத்தியோகத்தர்கள், அதே நேர்மையுடனும் கண்ணியத்துடனும் மக்களுக்குச் சிறந்த சேவையாற்ற முன்வர வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண பொதுச் சேவையில் வெற்றிடமாகக் காணப்பட்ட 3 குடியேற்ற உத்தியோகத்தர்கள் மற்றும் 48 வாகன சாரதிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகக் கேட்போர் […]
கனிமொழி ஆளுமையுள்ள பெண் அவருக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்? – சீமான்

“கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு கொடுப்பார்கள்?” என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார். வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாதக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, “கனிமொழி மாநில அரசியலில் வருவதற்கும் அவர்கள் வெற்றிபெறுவதையும் யார் எதிர்ப்பார்கள் என்று உங்களுக்குத் தெரியும். கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு சீட் கொடுக்காதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் கட்சிக்கு […]